வாட்ஸ்அப் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம்
பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்து பயன் அடையும் படி சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது மூலமாக மக்கள் பயனடைவர்.
இதன் படி வெள்ளிக்கிழமை இன்று 03.07.2020 மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணில் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
சென்னை நகரில் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளர் நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலைமையில் சென்னை நகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை புகார் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் அரசு கேட்டுக் கொண்ட நிலையில் ஊரடங்கும் அமலில் உள்ளது.
பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக சந்திக்காமல் வாட்ஸப்பில் தெரிவிக்கலாம் என சென்னை காவல்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கான தொலைபேசி எண்ணை தெரிவித்து இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக வந்து சந்திக்காமல் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தெரிவிக்கலாம் என சென்னை காவல்துறை தெரிவித்ததாக தகவல் வெளியானது.