ஆன்மிகம்ஆலோசனை

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள்

பாரம்பரியமாக தொன்று தொட்டு தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை பொங்கல் பண்டிகை. பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள். முதல் நாள் போகிப் பண்டிகை. இன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து மாலை நேரத்தில் தைத்திருநாளை வரவேற்பதற்கு காப்பு கட்டப்படும். கெட்டது எதுவும் வீட்டின் உள்ளே வராமல் இருக்க வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை சேர்த்து கட்டப்படுகிறது.

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள். காலை வேளையில் 9.35 – 10.35 மணி வரை காப்பு கட்டலாம். மதிய வேளையில் 2.05 – 3.35 மணி காப்பு கட்டலாம். மாலை வேளையில் 4 – 5.30 மணிக்குள் காப்பு கட்டலாம். மாலை 5.30 மணிக்குள் காப்பு கட்ட தங்கள் வசதிக்கேற்ப இந்த நல்ல நேரத்தை பயன்படுத்தி காப்பு கட்ட வேண்டும்.

போகிப் பண்டிகைக்கு மறுநாள் தை பொங்கல். அறுவடைத் திருநாளாக பொங்கல் வைப்பதற்கு, விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி இயற்கை தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம். காலை 9.30 – 11.05 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். மாலை வேளையில் 5 – 7.35 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரம்.

தைப்பொங்கல் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல். உழவர்களின் திருநாளாக உறுதுணையாக விளங்கும் உழவுத் தொழிலுக்கு நன்றி கூறும் விதமாக, மாட்டுப் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருக்கின்றன என்பதால் பசுக்களை வணங்கி பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

மேலும் படிக்க : தைத்திருநாள் பொங்கல் வைத்து வழிபடும் முறை

மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை 6 – 09 வரையிலும் நண்பகல் 1.35 முதல் 2.05 வரையிலும் மாலை 5.30 – 6.30 வரையிலும் பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக, பாதுகாப்புடன் பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள்.

மேலும் படிக்க : தைப்பொங்கல் சிறப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *