தை மாத சிறப்புகள்
காலநிலைகள் மாறினாலும் பண்பாட்டின் அடையாளங்கள் என்றும் மாறாதது. மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து வாசலிலே பூசணிப்பூவினை கொண்டு கோலமிட்டு, தன்னுடைய மணவாளனுக்கு வேண்டி காத்திருக்கும், கன்னியர் பெண்களுக்கு தை மாதத்தில் மாலை சூடுவது வழக்கம்.
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர்கள் மொழி. வேப்ப இலை, மாவிலை, ஆவாரம் பூ மூன்றையும் இணைத்து வாசல் மற்றும் வீடு முழுவதும் தோரணங்கள் கட்டுவது மங்கலம் உண்டாவதற்கு தான். காலப்போக்கில் தை திருநாட்களில் வீர சாகச விளையாட்டு நிகழ்ச்சி, ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் அடிப்படையாக நிகழ்ந்தன.
காலம் காலமாக பழகி வந்ததை தை முகூர்த்தங்கள் அடிப்படையில் திருமணம் நிகழ்த்துவதிலும், இருமனம் இணையும் திருமண வைபவத்தை நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தை பிறக்கும் முன்பே வீட்டில் வாசலில் உள்ள சுவர்களில் வெள்ளை அடித்து காவி நிற பட்டை அடிப்பது வழக்கமாக இருந்தன.
கோவில் மதில் சுவர்களிலும் வெள்ளை காவி நிறம் கோடுகள் போடுவது போன்று வீட்டிலும் போடுவார்கள். உறுதியான மனத்தையும், கள்ளமற்ற மனதையும், பற்றற்ற நிலையை பெறவும் இந்த காவி பட்டைகள் போடுவதற்கான ரகசியங்கள் என்று சொல்லப்படுகிறது. தை மாதத்திற்குப் பிறகு வருகின்ற ஞாயிற்றுக்கிழமையில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிறு வீட்டுப் பொங்கல் என்று குழந்தைகளுக்கான பொங்கல் வைப்பார்கள்.
மேலும் படிக்க : வருடத்தில் முக்கியமான கிருத்திகை விரதங்கள்
அன்றைய தினம் வாசலில் சிறு வீடு போல மணலால் ஓவியம் வரைந்து இதன் நடுவில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்க வேண்டும். இந்த பொங்கலை சிறு வாழை இலையில் படைத்து தாம்பூல பழம் வைத்து கற்பூரம் ஏற்றி நீர்நிலையில் மிதக்க விடுவார்கள். கங்கா தேவிக்கு பூஜை செய்வதுடன் தண்ணீரில் வாழும் நீர் முதலான ஜீவராசிகளுக்கு தானம் அளித்த புண்ணியம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மதியம் குழந்தைகளுடன் அமர்ந்து பாசத்துடன் பரிமாறி சாப்பிட வைக்க வேண்டும்.
பொங்கல் அதிகாலையில் சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவதை போல பொங்கல் இரவன்றும் வீட்டில் கன்னி பெண்களாக இறந்த பெண்களுக்காக குத்து விளக்கு முன்பு தலை வாழை இலையில், தாம்பூலம், புத்தாடைகள், பலகாரங்களை படைத்து வழிபட்டு முன்னோர்களையும் வணங்கி இவற்றை ஏழை எளியோருக்கு தானமாக வழங்க வேண்டும். அவர்கள் நினைவாக சொந்தத்தில் உள்ள கஷ்டப்படுகிற பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யலாம்.
மேலும் படிக்க : கிருஷ்ண பரமாத்மாவை வழிபடும் முறைகள்