ஊரடங்கு காலத்தில் பின்பற்றியவை என்னென்ன
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையும், நெருக்கமும் கொண்ட நாடுகளில் கொரோனா போன்ற நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளன. மற்ற எந்த நாடுகளையும் விட கடுமையாக உழைத்தால் தான் நாம் இவற்றை வெல்ல முடியும். இனிமேலும் ஊரடங்கு பின்பற்றுவதற்கு நம் பொருளாதாரம் ஒத்துழைக்க மறுக்கும் நிலையில் தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கோட்டைக்குள் பதுங்கி போரிட்ட நாம் இனி கோட்டைக்கு வெளியே வந்து எதிரியின் நேருக்கு நேர் மோதும் நிலையில் உள்ளோம். லாக் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இந்நேரம் முன் எப்போதையும் விட நம் மக்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஊரடங்கை மட்டுமே நம்பாமல் அதை ஒரு தள்ளிப்போடும் முயற்சியாக மட்டும் நினைத்து செயல்பட்டுக் ஒருவரை வென்ற நாடுகள் என்ன செய்தார்கள்.
சோதனைகளை அதிகப்படுத்தினர். நோயுற்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தார்கள். மக்கள் பொது வெளிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, நடைமுறை சாத்தியங்கள் வகுத்துக் கொண்டனர். இவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அனைத்திற்கும் தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்கினார்கள். மக்கள் முடக்கத்தை சமாளிக்கும் வகையில் பொருளாதார உதவி அளித்தார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்து கொண்டனர். அறிவியல் முறைப்படி மூடநம்பிக்கைகளை நம்பாமல் உறுபிணியை எதிர்த்துப் போரிட்டார்கள். பிப்ரவரி மாதம் அதிக தொற்றுகள் உடன் இருந்த ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடிய அளவு உறுபிணியை வென்றுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் இதுவரை மொத்தமே 3,015 கொரோனா நோயாளிகள் 12 கொரோனா மரணங்கள் தான் நிகழ்ந்துள்ளன. சென்னை நகரத்தின் ஒருநாள் மரண எண்ணிக்கை இதை விட அதிகமாக உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்பாக கொரோனா பரவல் ஆரம்பித்த போது அதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் அவசர அவசரமாக உலக நாடுகள் கையில் எடுத்த ஆயுதம் தான் ஊரடங்கு.
ஊரடங்கு சோதனை, சிகிச்சை, மருத்துவ வசதி, ஆராய்ச்சி, விழிப்புணர்வு, மாற்று நடவடிக்கைகள், பொருளாதாரம் என்ற பலவற்றை இணைத்து சிறப்புடன் செயலாற்றி பல நாடுகள் கொரோனா தொற்றின் தீவிர பாதிப்பிலிருந்து வெளிவந்துள்ளன.
ஊரடங்கு பெருமளவிலான தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் மீண்டும் வெளியே செல்லத் தொடங்கும் இந்த நிலையில் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் சென் பாலன் இவ்வாறு கூறியுள்ளார்.