சினிமா

காற்று வெளியிடை நாயகி மக்களுக்கு என்ன செய்தி வைத்துள்ளார்

அமேசான் ப்ரைமில் தொடர்ந்து தமிழ் படங்கள் 2 ரிலீஸான நிலையில் தற்போது மலையாள படமான சுஃபியம் சுஜாதயம் 3 ஜூலை 2020 ரிலீசானது. எக்ஸ்குளூசிவாக அமேசான் பிரைமில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது சுஃபியம் சுஜாதயம் படம்.

திரையரங்குகள் அளவிற்கு வசூல் அளிக்குமா இந்த OTT ரிலீஸ் என்ற ஹைபோதெடிகல் கொஸ்டின் என்று சொல்லக்கூடிய சமயத்திற்குத் தகுந்தாற்போல் பதில் அளிக்க கூடிய கேள்வியாகும்.

பொன்மகள் வந்தாள் மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு படங்களும் கதாநாயகியை மையமாகக் கொண்டு எழுந்த படமாக இருந்தது. கதைக்கரு கதை சென்ற விதம் எல்லாம் யூகிக்கும் வண்ணம் இருந்ததால் பலர் இதனை வரவேற்கவில்லை என்பதே நிதர்சனம்.

அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப் செய்தவர்கள் இரண்டு படத்தையும் பார்த்திருக்கலாம். ஆனால் படத்தைப் பார்ப்பதற்காக சப்ஸ்கிரைப் செய்தவர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

அந்தப் பட்டியலில் தற்போது ஒரு புதிய வரவு தான் மலையாள படமான சுஃபியம் சுஜாதயம். காற்று வெளியிடை புகழ் அதிதி ராய் இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாகவும் மலையாள கதாநாயகன் ஜெயசூர்யாவும் தேவ் மோகனும் இணைந்து நடித்துள்ளார்.

அதிதி ராய் இந்தப்படத்தின் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பேஜில் மலையாள படத்தின் தன்னுடைய கதாபாத்திரத்தின் புகைப்படத்தை ஷேர் செய்து கீழ்கூறிய வாக்கியங்களை குறிப்பிட்டுள்ளார்.

“Sujatha. Giving voice to characters that have no other voice- that’s the great worth of what we do.”

“சுஜாதா. வேறு குரல் இல்லாத கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுப்பது- அதுதான் நாம் செய்யும் செயலுக்கு மிகப் பெரிய மதிப்பு.”

இவரின் இந்த சொற்கள் மற்றும் ஹோம்லியான கிராமத்து பெண்குட்டி ஹாவ் சாரி கட்டிட்டு கொடுத்த போசும் மக்களை சுஃபியம் சுஜாதயம் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. விரைவில் படத்தை பார்த்து விமர்சனத்தையும் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *