சுப ஓரையில் செய்யும் காரியம் ஜெயமே
ஓரை என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஆதிக்கமாக கொண்டிருக்கும். இந்த ஓரையில் மொத்தம் 7 கிரகங்கள் அடங்கும். சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஏழு கிரகங்கள் இந்த ஹோரைகளில் இடம்பெற்றுள்ளன. இந்த ஏழு கிரகங்களுக்கும் உரிய நேர காலங்களுக்கு ஏற்ப ஓரைகள் என்று அழைக்கப்படுகின்றன. தினசரி ஒவ்வொரு நாளுக்கு ஏற்ப கிரக ஓரை சொந்தமாகும்.
ஒவ்வொரு கிரகத்திற்கான காலம் ஒரு மணி நேரமாகும் இந்த ஏழு ஓரைகளும் சூரிய உதயம் முதல் ஆதிக்கம் செலுத்த தொடங்குகின்றது சூரிய உதயம் ஆகும் நேரம் மற்றும் கிழமைகளுக்கு ஏற்ப ஓரைகள் தொடங்கும்.
ஓரை காலங்களில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 நேரமாக செயல்படும். ஆறு மணிக்காலத்தில் தொடங்குவதால் சராசரி சூரிய உதய நேரம் கொண்டு தான் ஆரம்பிக்கும். நேரம் காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கணக்கில் கொள்ளப்படுகின்றது.
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு அதிபதி வைத்து ஓரைகள் தொடங்குகின்றன. உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனுடைய அதிபதியாகும் ஆகையால் ஞாயிறு காலை 6 மணிக்கு சூரிய ஓரையை தொடக்கமாக கொண்டு இருக்கும். ஓரை காலங்கள் கிரகம் ஆதிக்கம் கொண்டு இருக்கும் என்பதால் நட்சத்திரங்கள் ராசிக்காரர்களுக்கு ஏற்ப ஓரைகள் சுபம் மற்றும் அசுப நேரங்களாக அமைகின்றன.
ஓரைகள் ராசிக்கு ஏற்ற மாதிரி கணக்கீடுகளில் சுபமாக அமையும். சிலருக்கு அது சுபமாகும். ராசியைப் பொருத்து அசுபமாகவும் அமையலாம்.