கை கால் நகங்களை பாதுகாக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
நம் உடலைப் பராமரிப்பது போன்று நம் நகங்களையும் பராமரித்தல் அவசியம். பூஞ்சை தொற்று சீக்கிரத்தில் குணமாகாது. இதனால் நகத்தில் அழகை கெடுத்து விடும். இதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை எடுப்பது அவசியம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மற்றும் உணவு முறைகளை சரியாக கடைபிடித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். தொற்று தீவிரமானால் நகத்தை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பொதுவாக இந்தத் தொற்று குணமாக சிகிச்சை ஆரம்பித்த சில மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.

நம்பகமான தரமான
நகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் செயற்கை நகங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். நம்பகமான தரமான பார்லர்களுக்கு சென்று பெடிக்யூர், மெனிக்யூர் செய்வதன் மூலம் நகங்களுக்கு உள்ளே படிந்திருக்கும் அழுக்கு சுத்தமாக்கபடுகின்றன. கைகள் மற்றும் கால்களை கழுவினால் உடனே சுத்தமான துணியால் துடைத்து விட வேண்டும். நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொது இடங்களில் செருப்பு அணியாமல் நடப்பது தவிர்க்கவும்.

பாதிப்புகள் அதிகம்
வயதானவர்களுக்கு நக பாதிப்புகள் அதிகம் இருக்கும். அதிகமாக ஷூ பயன்படுத்துபவர்கள், ரத்த ஓட்டம் சீராக இல்லாதவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு, நகத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு மற்றும் நகத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு பாதிப்பு அதிகமிருக்கும்.

வெளியே மட்டுமல்ல
நமது உடலில் நன்மை மற்றும் தீமை பயக்கக் கூடிய வைரஸ் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் இருக்கும். வெளிப்புற எதிர் காரணிகளுடன் இந்த பூஞ்சைகள் தொடர்பு ஏற்படும் போது அவை வளர தொடங்குகின்றன. வெப்பமாகவோ, ஈரப்பதமாகவும் இருக்கும் இடங்களில் பொதுவாக பூஞ்சை செழித்து வளரும். வெளியே மட்டுமல்ல, நம் உடலிலும் தான். அதனால் தான் ஷூ பயன்படுத்துபவர்களுக்கு காலில் ஈரம் அதிகரித்து இந்தத் தொற்று ஏற்படுகின்றன. நகத்தில் மாற்றம் தெரியும் போதே கவனிக்காமல் விட்டால், அரிப்பு, படை மற்றும் சொறி போன்ற தீவிரமான விரைவில் குணமாக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

பொதுவாக ஏற்படக்கூடிய பாதிப்பு
கை மற்றும் கால் விரல்களை சுத்தமாக வைக்காவிட்டால் பூஞ்சை தொற்று பூஞ்சானால் விரல்களில் ஏற்படும் இது ஒரே நாளில் பாதிப்பை ஏற்படுத்தாது மெதுவாக வளரக்கூடியது கை விரல்களை விட கால் விரல்களில் தான் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது வயதானவர்களுக்கு பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும் 100 ல் குறைந்தது 10 பேருக்கு கண்டிப்பாக இந்தப் பிரச்சனை இருக்கும் கை மற்றும் கால் விரல் நகங்களில் பொதுவாக ஏற்படக்கூடிய பாதிப்பு தான் நக பூஞ்சைத் தொற்று நகத்தின் நிறம் மாறுதல் நக தடிமன் நகத்தின் விளிம்பு உடைதல் போன்றவை பூஞ்சைத் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்