ஆரோக்கியம்வாழ்க்கை முறை

சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது ஒவ்வாமை ஏற்பட்டு விடும்

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் உண்ணும் உணவும், சுற்றுச்சூழலும் காரணமாக இருந்தாலும், சில நேரங்களில் நம்மை அறியாமல் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது ஒவ்வாமை ஏற்பட்டு விடும்.

இதனால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். அவசர அவசரமாக காலை எழுந்தவுடன் பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்புவது.

கணவரை வேலைக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் கடினமாகத் தான் இருக்கும். தினமும் ஏதாவது ஒரு சமையலை செய்ய வேண்டும். இன்று என்ன செய்யலாம். நாளை என்ன செய்யலாம்.

அன்று அன்றைய தினங்களில் திட்டமிடுவது இந்த மாதிரியான ஒவ்வாமை உணவுகளை உண்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலையை முடித்து விட்டு அன்றைய தினத்தில் அடுத்த வாரத்திற்கு என்னென்ன சமைக்கலாம் என்று பொறுமையாக திட்டமிட்டு வைப்பதால் இந்த ஒவ்வாமை உணவுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

இந்த உணவுகளை சேர்த்து உண்ணுவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பால் சாப்பிட்ட உடன் புளிப்பான பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது.

துளசி சாப்பிட்டு பால் சாப்பிட கூடாது. தேனையும், நெய்யையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. மீன் சாப்பிடும் நேரத்தில் அன்றைய தினங்களில் திப்பிலி சேர்க்கக் கூடாது. திப்பிலி கஷாயம் வைக்கும் போது அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

முள்ளங்கியும் மீன் உணவுகளையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. மோர் குடித்து விட்டு வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. இறைச்சி சாப்பிடும் நாட்களில் விளக்கெண்ணையை சேர்க்கக் கூடாது.

முள்ளங்கி சேர்க்கும் போது பால் சாப்பிடக் கூடாது. கோதுமை உடன் சாப்பிடும் போது நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் பாகற்காய் சாப்பிடவே கூடாது. இவற்றை மனதில் வைத்து திட்டமிட்டு சமயங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *