நல்ல ஞானமே பக்தி
உண்மையான பக்தி என்பது நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நமக்கு கற்றுத் தருவதாகும்.
அந்த பக்தி ஆசையை வெல்ல கற்றுக் கொடுக்கின்றது.
வேகம் அதே அளவிற்கு விவேகம் இவற்றை ஆழ்ந்த பக்தி கொண்டவன் ஞானமாக இறையிடமிருந்து பெறுகிறான்.
மனம் போன போக்கில்
மனம் தன் போக்கில் போகாமல் அதனை அடக்கியாள ஒருவன் முயல்கிறானே அவனுக்கு பக்தி என்பது அதிகமாக இருக்கும்.
வைராக்கியம் பெருகும் நிம்மதியை கற்றுக் கொடுக்கும்.
வாழ்வில் ஏற்படும் சவால்கள் அனைத்தும் நம்மை விட்டுப் போக வேண்டுமெனில் அதற்கு ஞானம் வேண்டும்.
பக்குவம் தரும் ஞானம்:
அனைத்து சூழல்களையும் சமமாக கையாள பக்குவம் வேண்டும் ,அந்த பக்குவத்தினை நமக்கு கற்றுத் தருவது மனமானது தன் போக்கில் செல்லாமல் ஞானம் என்ற போக்கு செல்லுமாறு செலுத்த வேண்டும். எண்ணங்களை நெறிப்படுத்தி, வீணான எண்ணங்கள் விரட்டப்பட வேண்டும்.
ஆன்மா ஆழ்ந்த அமைதி :
சிறந்த பக்தி நிறைந்த ஒரு உள்ளம் ஞானத்தோடு செயல்படும் நான் என்ற அகந்தை விளக்கி வைக்கும். நிம்மதியான நிலைத்த தன்மையை பெரும் ஆத்மா இந்த உலக வாழ்க்கையை அறிந்த ஒன்றாக இருக்கும். ஞானப் பாதையை இறையிடமிருந்து பெற்ற ஆத்மாவை பக்தியை மெச்சி வாழ வைக்கும்.
ஞானப்பாதையா நிங்கள்:
நீங்கள் எப்படிப்பட்ட ஆத்மா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் போட்டி பொறாமை வஞ்சகம் ஆசை வன்முறை கால் புணர்ச்சி அனைத்தும் இல்லாத ஒரு உள்ளம் அமைதியை மட்டுமே ஆழமாக கொண்ட உள்ளமாக இருக்கும் அது இயற்கையோடு இணைந்து வாழும் நீங்களும் அந்த உள்ளத்தைக் கொண்டவராய் என்பதை பரிசோதித்து பாருங்கள் பக்தி ஞானத்தையும் நல்ல பண்புகளையும் கற்றுத் தரும் அதனை கொண்டவரே உண்மையான பக்திமானவர்.
மேலும் படிக்க :