நன்மைக்கும் தீமைக்கும் இடையே
நமக்கு ஏற்படும் நன்மை, தீமைக்கு நாமே பொறுப்பு. நாம் உலகத்தில் இது சுவைப்பவை, தொடுபவை, உணர்பவை இப்படி ஒவ்வொன்றையும் ஆண்டவன் தான் அளிக்கின்றான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு முயற்சி சுயநலத்திற்காக அமையும் போது தீய எண்ணம் ஆகிவிடுகின்றன. அதுவே பொது நலத்திற்காக அமையும் போது நல்ல எண்ணம் ஆக மாறும். எனக்கு எல்லாம் வேண்டும். இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப்பட்டு கொண்டிருப்பவர்கள் எவ்வளவு செல்வங்களைப் பெற்று இருந்தாலும் ஏழையாக தான் இருப்பார்கள்.
எனக்கு எதுவும் வேண்டாம். சிறிதளவு உள்ள பொருளையும் பிறருக்காக கொடுத்து மகிழ்பவர்கள். பொருள் இல்லாவிட்டாலும் மிகப்பெரிய செல்வந்தர்கள் தான். எது நல்லது? எது கெட்டது? நாம் இவற்றின் மூலமாக பெறுகின்ற உணர்ச்சியை பொறுத்து தான் அவை அமைகிறது.
என்னிடம் தோன்றும் எண்ணம் என்னை பற்றிய தற்பெருமையை பிறரிடம் பொறாமை என்னுடைய சுயநலத்தை தூண்டிவிட்டாள் அவை கெட்டவை. என்னிடம் ஏற்படும் எண்ணங்கள் பிறருடைய நன்மைக்காக சேவை செய்யும்படி என்னை எளியவனாக நினைக்க உதவும் படி. உன்னுடைய செயலினால் எவருக்கும் கெடுதல் ஏற்படாதபடி அமைந்தால் அது நல்லவையாக கருதப்படுகிறது.
இந்த இரண்டு எண்ணங்களும் தெரிந்தோ, தெரியாமலோ நாம் தான் காரணகர்த்தாவாக இருக்கிறோம். நாம் வெளிப்படையாக சொல்லும் ஆசைகள் நல்லெண்ணங்கள் ஆக உருவெடுக்கும். நாம் ரகசியமாக மனதில் வைத்துக் கொள்ளும் கெட்ட ஆசைகள் தீய எண்ணங்களாக வடிவெடுக்கும்.
இரவு வந்து விட்டால் நாம் இருட்டி விட்டது என்று கவலைப் படுவதில்லை. ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் போதும் இருள் தானாகவே அகன்று விடப் போகிறது. இதே போன்று நல்ல எண்ணங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்து பழகினால் தீயவை தானாகவே மறைந்து விடும்.
நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவும், கெட்டதாகவும் அமைகின்றது. நமது மனதில் நல்ல எண்ணங்கள் உண்டாகும். சில சமயங்களில் கெட்ட எண்ணங்களும் உண்டாகும். எனவே எண்ணங்களை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள் எல்லாம் தானாக தேடி வரும்.