செய்திகள்தேசியம்

இந்தியாவிற்கு முன்னுதாரண கிராமம்!

என்னடா இது மாய கொடுமையாக இருக்கின்றது. மேற்கு வங்க மாநிலத்தில் மொபைல் போன் பயன்படுத்த ஒரு கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. போன் மட்டுமல்ல, டிவி பார்க்கவும் பாடல்கள் கேட்கவும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இந்தத் தடையை மீறிச் செயல்படுபவர்கள் ரூபாய் 7 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி முதல் அமைச்சராக இருக்கின்றார். மேற்கு வங்க மாநிலத்தின் மூர்ஷிடபட் மாவட்டத்தில் அத்வைதா என்ற கிராமம் இருக்கிறது அங்குச் சிறுபான்மையினர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தின் கிராம மக்களுக்கான ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் குறித்து விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி அதற்குத் வாழ்வியல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஒழுக்க விதிமுறைகளின்படி இங்கே வாழும் இளைய தலைமுறையினர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் செப்பனிட்டு கொண்டு செல்ல வேண்டும் கலாச்சாரமும் வாழ்வியலில் ஒன்று என்பதை உணர வேண்டும். ஆகையால் இங்கு விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. டிவி பார்ப்பது பாடல்கள் கேட்பது மொபைல் போன்கள் பயன்படுத்துவது இந்தத் தடை விதிக்கப்பட்டது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மதுபானம் அருந்துவது விற்பனை செய்வது லாட்டரி சீட்டுகள் தொடர்பான வியாபாரங்களை செய்யக் கூடாது.

இத்தகைய விதிமுறைகளை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும் தோப்புக்கரணம் போடும் தண்டனை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் சமூகம் சரியான பாதையில் செல்லும் தேவையற்ற கவன குறைவு ஏற்படாது இலக்குகள்குறித்த தெளிவான விளக்கங்கள் கிடைக்கப் பெறலாம். தொடர்ந்து நோக்கிப் பயணிக்கலாம் என்பதை மனதில் கொண்டு இந்தக் கிராமம் இந்தியாவிற்கு முன்மாதிரியாக இருக்கின்றது.

கிராம நடைமுறைகளைப் போல் இந்தியாவிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம் நாட்டில் இளைஞர்கள் பலர் திருந்துவதற்கு இது உந்துதலாக இருக்கும் தேவையற்ற குறுக்கீடுகளைத் தவிர்த்துக்கொள்ள இது உதவியாக இருக்கும்

கவனக்குறைவான செயல்களால் இலக்குகள் முறையாக முடிக்கப்படாமல் தடுமாறுகின்றனர். ஆனால் இது போன்ற அவசியமான தடைகள் விதிக்கப்படும்போது பயம் என்பது இருக்கும் தண்டனைபற்றிய பயத்தால் தவறுகள் குறையும் ஆபாச காட்சிகள் பார்ப்பது குறைந்தால் மக்களின் எண்ணங்கள் சீர்படும்.

??????????????????????????????????????????????????????????????????????

இளைஞர்கள் நல் வழிபடுவார்கள் இதனை நாம் பாராட்டியாக வேண்டும். இந்தியா முழுவதும் இத்தகைய தடைகள் வந்தால் தவறொன்றுமில்லை இதற்குத் தனி மனித சுதந்திரம் என்று பேசினால் முன்னேறுவது கடினம் தான் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நல்லதாகும்.

அரசுக்கு இந்த பரிந்துரையைச் சிலேட்டு குச்சி தருகின்றது ஒட்டுமொத்தமாகப் பொழுதுபோக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை வாரத்திற்கு ஒருநாள் அதுவும் தேவைப்படும் சொற்களுக்கு மட்டும் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *