சபாஷ்! சுஷாந்தின் அச்சு அசலான மெழுகு சிலை
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மெழுகுச் சிலையை செய்து கலக்கிமய மேற்கு வங்கத்தை சேர்ந்த சிற்பி. இணையதளத்தில் பரவி வரும் அற்புதமான புகைப்படங்கள்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் என்ற பெயரைவிட எம். எஸ். தோனி படத்தில் நடித்தவர் என்று சொன்னாலே மக்களுக்கு தெரிந்தவராக இருந்த நடிகர் மறைந்த பின் தன் பெயரினாலேயே எல்லோராலும் அறியும்படி புகழ் பெற்றுள்ளார்.
இவரின் மறைவுக்குப்பின் தில் பச்சாரா என்ற இந்திப்படம் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் அனைவரும் பார்க்கும்படி வெளியானது. ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் நாவலின் தழுவலே இந்தப் படம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் மறைவுக்கு முன் நடித்த கடைசி படம் இதுவே ஆகையால் இப்படம் இவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிற்பி சுசாந்தா ரே மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ரசிகர் ஆவார். சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நினைவாக மெழுகுச் சிலையை செய்துள்ளார்.
இதற்கு முன்பு பாலிவுட்டின் பிக் பி என்று சொல்லப்படும் அமிதாப் பச்சன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி போன்றவர்களின் மெழுகுச் சிலையை செய்துள்ளார்.
அருங்காட்சியகத்தில் வைத்து மக்கள் பார்வையிட இன்று சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள்.
அதனைத் தொடர்ந்து சுஷன்ட் சிங் ராஜ்புட்டின் மெழுகு சிலை அவரின் குடும்பத்தினர் விரும்பி கேட்டால் வேறு ஒரு சிலை செய்து தருவேன். இந்த சிலை பிரத்தியேகமாக அருங்காட்சியகத்துக்கு செய்யப்பட்டுள்ளது என்ற வரிகளுடன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.