உடல் பருமனால் அவதியா..? உடல் எடையை குறைக்க எளிமையான டிப்ஸ்..!
உடல் பருமன் தற்போதுள்ள தலைமுறையினருக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. சிலர் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் உடல் எடையை குறைக்க சில மருத்துவ குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
கற்றாழை எல்லாரும் எளிதாக வாங்கக்கூடிய அல்லது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்று, கிராமங்களில் இன்னும் சிலரது கொள்ளையில் கற்றாழை செடி வளர்வதை பார்க்கலாம். அந்த கற்றாழையை வைத்து எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3 மற்றும் பி6 உள்ளன. கற்றாழை வைட்டமின் பி 12 மற்றும் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சுமார் 20 வகையான தாதுக்களையும் கொண்டிருக்கும் தாவரங்களில் ஒன்று. இதனால் அவை பல்வேறு பயன்களை வழங்கி வருகிறது.
1- சூடான நீரில் கற்றாழை.
கற்றாழை ஜெல்லை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வரலாம் இது உடல் எடை மட்டுமல்லாது கண்னுக்கு தெரியாத பல்வேறு பயன்களை வழங்கி வருகிறது.
2- தேன் கலந்து சாப்பிடலாம்
வெறும் கற்றாழை குடிக்க குழந்தைகள் குடிக்க தயங்கலாம், ஏனென்றால் அது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இதனால், கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன் கலந்து சுவையாக குடித்து வரலாம் , இவை வேகமாக உடல் எடையை குறைக்க உதவும்.
3-எலுமிச்சையுடன் உட்கொள்ளவும்
ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து. அதனுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே சூடுபடுத்தவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு:- இவை அனைத்தும் பொதுவானவை, அதனால் இதனை முயற்சிக்கும் முன் மருத்துவரை அனுகி, அவரின் அனுமதியுடன் முயற்சிப்பது நல்லது.