கூகுள் நிறுவனம் அளித்த விடுமுறை அறிவிப்பு
பல நிறுவனங்களில் விதிமுறைகள் கடுமையாக உள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களிடம் விடுமுறையை கோர தூண்டி உள்ளன.
தொற்றுநோய் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதுகாப்பது அவசியம் என்றும் அதிக அழுத்தம், மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளன.
வீட்டிலிருந்தே வேலை செய்து பழகிவிட்ட தொழிலாளர்களுக்கு மீட்டிங், இரவு, பகல் வேலை என்று தற்போது அழுத்தம் அதிகரித்து உள்ளன.
தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலத்தை பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்த கூகுள் நிறுவனம் தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் வார விடுமுறையை அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெள்ளிக்கிழமை திடீரென அவசர வேலை வந்து விட்டாள் வெள்ளிக்கிழமை விடுமுறையை மற்றொரு நாளில் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
தொற்றுநோய் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்ய பல நிறுவனங்கள் அனுமதித்து உள்ளன. ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது உலகெங்கிலும் பலநாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பல நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் வார விடுமுறையை அளித்து உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளன.