தமிழகக் காவல்த்துறையினருக்கு வார விடுமுறை
தமிழகத்தில் கடந்த 8 மாதமாகக் கடுமையாக உழைத்த போலீஸ்காரர்களுக்கு விடுமுறை என்பது இல்லாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக போலீசார் வழக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை யாவது கொடுக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறுகின்றது.
- தமிழகத்தில் காவல்த்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- சுழற்சிமுறையில் தமிழகத்தில் காவல்த்துறையினருக்கு வாரம் ஒரு முறை விடுமுறையானது வழங்கப்படுகின்றது.
- தமிழகத்தில் ஒரு நாள் காவலர்க்கு விடுமுறை அளிப்பதுடன் மன உளைச்சல் குறையும்.
வாரம் ஒரு முறை
தமிழக போலீசாருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற முடிவினை ஏற்று டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டிருக்கிறார்.தமிழக போலீசாருக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கின்றது. விடுமுறை இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்று பல நாள் கோரிக்கைகள் இருந்திருக்கின்றன.
விடுப்பு வழங்கி ஒப்புதல்
அதனையொட்டி இந்த கோரிக்கைகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பின்பு தற்போது ஒரு முடிவு கிடைத்திருக்கின்றது வாரத்துக்கு ஒரு நாள் காவல்துறையினருக்கு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
பணிச்சுமை
காவல் துறையினருக்கு ஏற்படும் பணிச்சுமை மற்றும் மனச்சுமை ஆகியவை இந்த முறையின் மூலமாகக் குறையும் என்று நம்பப்படுகின்றது சுழற்சி முறையில் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது இனிமேல் வழங்கப்படும்