வானிலை நிலவரம் புயலாக மாறும் வங்கக்கடலின் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் தென்கிழக்கே ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளன. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும்.
- இன்று கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும்.
- கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேற்கு வடமேற்கு திசையில் இரண்டாம் தேதி மாலையில் இலங்கையைக் கடந்து குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும். இன்று வானிலை ஆய்வு மையம் நிலவரம் தெரிவித்துள்ளன. இன்று கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழக, கடலோர மாவட்டங்கள்
நாளை தென் தமிழக, கடலோர மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வானிலை அறிக்கை
டிசம்பர் 3 விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மிக கனமழை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் சூறாவளி காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 4 காரைக்கால், புதுவை, தமிழகம் ஆகிய இடங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளன.