தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு
தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தீவிரமாக மழை பெய்து வருகின்றது.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்து கொண்டிருப்பதால் நிச்சயம் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகின்றது.
சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது தகவலின் படி சேலம், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. என்றும், கடலோர மாவட்டங்களில் மழை வரத்து அதிகம் இருக்கும்.
கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக, காற்று தீவிரமாக வீசும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் மேகமூட்டம் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளது. லேசான தூறலும், சாரலும் வரலாம் கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு என்பது குறைவாக உள்ளது. தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் வெயில் அதிகரித்து காணப்படுகின்றது. இங்கு மழை வாய்ப்பு என்பது சற்று குறைவு தான்.