மக்களே உஷார்…இந்த மாவட்டங்கள் தான் குறி…!
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று வடக்கு வடமேற்கு திசையில் இலங்கை அருகே 5ம் தேதி நகர்ந்து பின்னர் மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, என்னூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் துறைமுகங்களில் உள்ளூர் புயல் முன்னறிவிப்பு குறியீடு 3 இன்று பிற்பகல் ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் தூர முன்னறிவிப்பு குறியீடு 1 தொடர்கிறது.
மேலும் இதனால் வரும் 5ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் 6ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்,புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 7ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுவை காரைக்கால். ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுகோட்டை, அரியலூர், பெரம்பலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தரைக்காற்று எச்சரிக்கை: (06.03.2022, 07.03.2022)
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 45km வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது.