டிஎன்பிஎஸ்சி

ஒற்றுமை காணும் இந்திய! ஒளிரும் இந்தியா..

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் உறுப்பு 3இன் கீழ் இந்தியாவிலுள்ள நிலபரப்பை மாநிலங்கள்  மூலமாக ஒழுங்குபடுத்துதல் பற்றி கூறுகின்றது. உறுப்பு 3ன் கீழ் எந்தவொரு மாநிலத்தையும் உருவாக்கலாம் அல்லது பெயர் மாற்றம் செய்யலாம் மற்றும் எல்லை சீர்திருத்தம் செய்யலாம். 
நிர்வாக தேவைக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. நிர்வாகம் சீர்பட செய்ய வேண்டும் என பிரிக்கப்பட்ட மாநிலங்கள் இன்று ஒற்றுமையுடன் வளங்களைப் பங்கிட்டுக் வாழ்கின்றனவா, என்றால் சந்தேகமே. 1947 தனி மாநில கோரிக்கையை ஓமந்தூர் ராமசாமி செட்டியார் முதலமைச்சரானதும் மொழிவாரி மாநிலமாக பிரிக்க கோரி அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 1949 நவம்பர் மாதம் மாநிலம் காங்கிரஸ் காரியக் கமிட்டி தனி ஆந்திர மாநிலத்தை அமைக்குமாறு வலியுறுத்தியது. 

 கமிஷன்கள்:அடுத்து அமைக்கப்பட்ட தாஷ் கமிஷன் பரிந்துரையில் ஆந்திர மகாசபை அமைக்க கோரியது. ராயலசீமாவை தலைநகரமாகக் கொண்டு மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரினார். மேலும் தாஷ்  கமிஷன் மொழி அடிப்படையில் புதிய மாநிலங்கள் அமைக்கப்படுவது தேச நலனுக்கு ஏற்றது அல்ல என பரிந்துரைத்தது. தாஷ் கமிஷனின் அறிக்கைகள் ஆந்திர மாநிலத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியவில்லை. 
பாஷல் அலி கமிட்டி  மூன்று முக்கிய பரிந்துரைகள் செய்தது மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு ஜேவிபி கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் ஜேவிபி கமிட்டி சென்னை நகரை ஆந்திராவிற்கு கொடுக்க அனுமதி மறுத்தது. ஜேவிபி கமிட்டி அறிக்கை  சர்ச்சைகளில் முடிந்தன.

சென்னை அரசாங்கம்:

சென்னையில் உரிமை கொண்டாடி ஆந்திரா, சென்னை அரசாங்கம் இரண்டும் போராடின. சென்னையில் ஆந்திராவிற்கும் அதனை ஒட்டியுள்ள திருத்தணியும் ஆந்திராவிற்கு கொடுக்க தமிழரசுக் கட்சித் தலைவர் மா.போ. சிவஞானம் எதிர்ப்பு தெரிவித்தார். 1952 பொட்டி ஸ்ரீராமுலுவின் போராட்டம் மற்றும் அவரது இழப்பு மிகுந்த சிக்கலை நேருவின் அரசுக்கு உருவாக்கியது. காந்தியவாதி என அழைக்கப்பட்ட பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திர மாநிலம் அமைவதற்காக 1952 டிசம்பர் 15இல் உயிரிழந்தார். பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர் தியாகம் ஆந்திர மாநிலம் உருவாக்கியது. யாருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்க முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் ஆந்திர மாநிலம் 1953 அக்டோபர் 1, தேதியில் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் தனித்தனியாக மொழிவாரியாக பிரிக்க போராட்டங்களை நடத்தின.

மாநிலங்கள் பிரிப்பு:

1953 கமிஷன் பிசி ராய் திட்டம் போன்றவற்றால் கொள்கைகள் வகுக்கப்பட்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட மாநிலங்கள் மொழியைப் போன்றே நிதி, நிர்வாகம் போன்ற ஆதார காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு  ஒற்றுமை வலியுறுத்தி தொடர்ந்து நின்று செயல்பட வேண்டும் என வலியுறுத்தியது. இத்திட்டத்தின்படி இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் இருப்பதைவிட ஐந்து அல்லது ஆறு பெரிய அணிகளாக பிரிந்து விடலாம் என்றார் ஆனால் ராய் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

மாநிலங்கள் மறுசீரமைப்பு:

1960ல் மஹாராஷ்டிரா உருவாக்கம் மற்றும் குஜராத் மாநிலங்கள் 1961ல் யூனியன் பிரதேச பகுதிகளும், வடகிழக்கு இந்தியாவில் 1972ல் மாபெரும் மறுசீரமைப்பு தொடங்கப்பட்டது இதன்படி மிசோரம் 23-ஆவது மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் 24-ஆவது மாநிலமாகும். கோவா 75-வது மாநிலமாகவும் உருவாக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் 26-வது மாநிலம் ,உத்ராஞ்சல் 27-வது மாநிலமாக மேலும் ஜார்கண்ட் 28-வது மாநிலமாகும் தெலங்கானா 29வது மாநிலமாக பிரிக்கப்பட்டது.

தனி மாநில கொள்கை:

தனிமாநில கொள்கையால் சாதிக்கப் பட்டதை விட சதியால் சிக்கியது அதிகம். தனி மாநிலங்கள் ஒற்றுமையையும் வளங்களை பங்கீடு செய்தலை கொள்கையாக வைத்திருக்க வேண்டும். கலாச்சாரம் பொருளாதாரம் மொழி சாதி பல வேறுபாடுகளைக் கடந்து நிற்கவேண்டிய மாநிலங்கள் தங்களுக்குள் வளங்களை பங்கிடமுட்டி கொள்கின்றன. இது தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும்.
தேச நலனை மனதில் கொண்டு வளங்களை சமமாக பங்கிட்டு செய்யவேண்டிய பொறுப்புணர்ச்சி அரசுக்கும் அது சார்ந்த அமைப்புகளுக்கும் இருக்க வேண்டும். ஆனால் அரசியல் குறுக்கீடுகள், சுயநலவாதிகளின் பகடைக்காயாக மாநிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அப்பாவி மக்கள்:

என்ன நடக்கின்றது என்று அறியாமல் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்து மக்கள் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் தூண்டப்படுகின்றனர். மாநிலங்களுக்கிடையே நீர் பங்கீடு, வளங்கள் பங்கீடுகளுக்கிடையே பரஸ்பரம் என்பது பற்றாக்குறையாக உள்ளது. இன்றும் தேசத்தில் பல ஒற்றுமைகள் இருப்பினும் ஆனால் இன்னும் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.

மொழியை பின்னனியாக வைத்து மனிதத்தை கசக்கும் கூட்டங்கள் எண்ணிக்கை பெருகி காணப்படுகின்றன. மாநிலங்களுக்கு இடையே சிண்டு முடிந்து வேடிக்கை பார்க்கும் தேசிய பிராந்திய கட்சிகளின் சுயநலப் போக்கால் பாதிக்கப்படுவது சாமானியன் ஆவான். பல்வேறு நிறம் குணம் மனம் பழக்க வழக்கங்கள் வேறுபாடு இருப்பினும் தேசியம் என்ற கொள்கையால் ஒன்றிணைந்த மக்கள் கூட்டம் இன்றும் நிலைத்திருப்பது. நமது தேசிய தலைவர்களால்தான் அது சாத்தியம் ஆகும்.

ஒற்றுமை:

கார்கில் போர், குஜராத் பூகம்பம், சென்னையில் சுனாமி என காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வடக்கு முதல் தெற்கு வரை எங்கு சிக்கல் ஏற்பட்டாலும் ஒருவருக்கொருவர் எந்தவித முன்னறிவிப்புமின்றி உதவுவோம். மொழி சாதி கலாச்சாரம் பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் நிறம் இவற்றைக் கடந்து மனிதம், தேசியம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி கொள்வது இந்திய தன்மையாகும்.

பங்கிடுதல்

வளங்களை பங்கிடுதல் ஒரு மாநிலங்களிலிருந்து மற்றொரு மாநிலங்களுக்கு தேவையான வளங்களை பங்கீடு செய்தல் என்பது அடிப்படைக் கொள்கையாகும். நமது நாட்டின் பிராந்திய நிர்வாகங்கள். பிராந்திய நிர்வாகங்களை செம்மையாக நேர்பட நடத்துவது நமது குறிக்கோளாகும். இதற்கிடையில் ஏற்படும் தேவையற்ற  சலசலப்புகளுக்கு சவால்களுக்கும் என்றும் செவிசாய்க்காமல் நிர்வாகத்தை திறம்பட நடத்தி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஊட்டி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுதல் இருக்க வேண்டும்.
பண்பாடு கலாச்சார பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். எத்தனை மொழிகள் வழக்கில் இருந்தாலும் நிலைக்கும் ஒரு மொழி அது மனித மொழியாகும். ஒற்றுமை என்பதை மனதில் கொண்டு வடக்கு, தெற்கு என நான்கு பகுதிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம்.

அரசியல் பிரச்சினை:

மாநிலங்களுக்கிடையே ஏற்படும் அரசியல் பிரச்சனைகள் அதற்குரிய முறைப்படி தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். வளங்களை பங்கீடு செய்வது போல் மாநிலங்களுக்கிடையே வேலைவாய்ப்புகளையும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரித்து அவர்களை முறைப்படி பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து மாநிலங்களும் சமமாக வளர்வதுடன் ஒற்றுமை பெருக்கி பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்க செய்யலாம். அடுத்து வரும் தலைமுறைகளும் இதனை பின்பற்ற ஏதுவாக இருக்கும். அதனால் ஒற்றுமை, அமைதி, அன்பு, வளப்பங்கீடு போன்றவற்றை ஆயுதமாகக் கொண்டு வளர்ச்சியை ஊக்கப்படுத்துவோம்  இந்தியாவை ஒளிர செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *