உடலின் இயக்கத்திற்கு இது அவசியம்
குளிர்காலத்தில் காபி, டீ, ஹாட் சாக்லேட் போன்ற பானங்களை குடிக்க அடிக்கடி தோணும். இந்தப் பானங்களை குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதில் கலோரிகளை கவனத்தில் கொள்வது அவசியம். குளிர்காலங்களில் தண்ணீர் தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுவார்கள்.
- பானங்களை குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
- சூடான நீர் ஆகாரங்களை குடிப்பதால் செரிமான மண்டலத்தை தூண்டி, ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
- கொட்டைகள் எல்லா காலத்திலும் சிறந்தவை. குறிப்பாக குளிர் காலத்திற்கு ஏற்றது.
உடல் இயக்கத்திற்கு அவசியம்
உடல் இயக்கத்திற்கு அவசியம் தண்ணீர். ஜில்லென்ற தண்ணீரை குடிக்காமல் வெதுவெதுப்பாக சூடு செய்து குடிப்பது அவசியம். இதனால் சளித் தொந்தரவுகள் ஏற்படாது. சூடான நீர் ஆகாரங்களை குடிப்பதால் செரிமான மண்டலத்தை தூண்டி, ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
நீர்ச்சத்துள்ள காய்கறி
மேலும் தக்காளி, முள்ளங்கி போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் இந்த நேரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உலர் பழங்கள், கொட்டைகள் எல்லா காலத்திலும் சிறந்தவை. குறிப்பாக குளிர் காலத்திற்கு ஏற்றது.
பாதாம், வால்நட், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை அளவாக சாப்பிடும் போது உடலின் வெப்பத்தை அதிகரித்து குளிர்காலத்தில் சோர்வை போக்கி உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும்.