அன்பும் உறவும்வாழ்க்கை முறை

நாம பிசியா இருந்தாலும் இதையும் பாலோ பண்லாமே!

இன்றைய காலகட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்பொழுதுமே பிஸியாகவே இருக்கும் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா? என்பதையும் சற்று கவனிக்க வேண்டும். எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க வேண்டும்.

யார் என்ன சொன்னால் என்ன? உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் புறம் பேசி இருந்தால் உங்கள் மனமே உங்களை தண்டித்து விடும். அதற்கு தயவு செய்து இடம் கொடுத்து விடாதீர்கள். ஒவ்வொருவரும் வீட்டிற்குள் செல்லும் போது நம் வீட்டு வாசலில் செருப்பை கழற்றி வைப்பது போல, சுமந்து கொண்டிருக்கும் பாரத்தையும் வாசலிலேயே இறக்கி விட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அடுத்தவர் பற்றி உங்களிடம் யாராவது குறை கூற வந்தால் அதைத் தவிர்த்து விடுங்கள். ஒவ்வொருவருக்குமே சாதிக்க ஆற்றல் ஏராளமாக இருக்கிறது. இதை கண்டுபிடித்து அதன் வழியில் பயணிக்கும் போதே இன்று கிடைக்கா விட்டாலும், என்றாவது ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும்.

ஏனென்றால் உண்மையான உழைப்பிற்கு என்றும் தோல்வியை இருப்பதில்லை. வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம் இது தான். சந்தோசமாக இருந்தால் எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். மகிழ்ச்சி இருந்தால் எந்த வேலைகளையும் இயல்பாக முடிக்க முடியும். அடுத்தவர் களுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்.

இந்த உலகத்தை எப்பொழுதும் கொண்டாட்டத்துடன் வைங்கள். மன உளைச்சலில் இருந்த ஒருவரிடம் ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்று கேளுங்கள், என்னைப் பற்றி அவர் தவறாக சொல்லி விட்டார் என்று பதில் வந்தால்.

மனபாரத்தை இறக்கி வைத்து விடுங்கள். வாழ்வில் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு நொடியும் மிகவும் உன்னதமானது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், என்பதை சிந்திக்க வேண்டும். உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, நாக்குக்கு நரம்பு கிடையாது. உங்கள் வேலையை நீங்கள் ஆராதித்தால் குறை சொன்ன சமூகமே உங்களை பாராட்டட்டுமே.

உண்மை தானே, குறை சொல்வதை விட்டு விட்டு நம்மை பற்றி சிந்தித்தால் வளர்ச்சிக்கு நல்லது தானே. ஒருவர் உங்களை பாராட்டினாலும், குறை சொன்னாலும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியை தான் எதிர்பார்க்கிறது. நம்மைப் பற்றி குறை சொல்ல இந்த சமூகத்தில் யாராவது ஒருவர் காத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கான முக்கிய பணி இது தான். நம்மை பற்றி அடுத்தவர்கள் இடம் என்ன சொல்ல வேண்டும் என்று. இது அவர்கள் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் என்பது அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏதோ ஒன்றை இழந்தது போல் நமக்கு நாமே பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி கொள்வதோடு பலரின் வாழ்வில் காண முடிகிறது. குடும்ப பாரம் அலுவலகத்தில் கூடுதல் பணி யாராவது ஒருவர் நம்மைப் பற்றி தவறாகப் பேசிவிட்டால் அவர் மீது தொடர் கோபம் என்று மனதில் போட்டு குப்பைத் தொட்டியாக வைத்திருக்கிறோம்.

இப்போது சர்வ சாதாரணமாக பலரும் மகிழ்ச்சியை விரும்பி கொண்டாடி வருகின்றனர். அதை நாம் முறையாக கொள்கிறோமா என்பது முக்கியமான கேள்வி. அப்படியிருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் பூத்துக் கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *