உடல் நலம் பெற
உடல் நலம் பெற முடக்குவாத நோய்க்கு சிறந்த நிவாரணியாக ஆப்பிள் விளங்குகிறது. நரம்புக்கு, மூளைக்கும் சிறந்த சத்துணவு. குடல் சார்ந்த உபாதைகளுக்கு சிறந்த குணப்படுத்தும் தன்மை கொண்டது ஆப்பிள். நல்ல உணவாகவும், மருந்தாகவும், அழகு சாதனப் பொருளாகவும், சிறந்த மல சீர்படுத்தி என எல்லா நல்ல பண்புகளையும் கொண்ட ஒரே பொருள் ஆப்பிள்.
- நரம்புக்கு, மூளைக்கும் சிறந்த சத்துணவு.
- நல்ல உணவாகவும், மருந்தாகவும், அழகு சாதனப் பொருளாகவும், சிறந்த மல சீர்படுத்தி.
- திறன் ஊக்கியாக கருதப்படுவதால் சிறந்த நரம்பு சத்து மருந்து
நரம்பு சத்துள்ள பாதாம், உலர் பழம்
பாதாம், உலர் ஆப்ரிகாட், உலர் பழம் அனைத்தும் ஒரே இனத்தையும், ரோசாசியா எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த பருப்புக்கள் அதிக சத்துள்ளவை. இவை நோயை குணப்படுத்துவதுடன் திறன் ஊக்கியாக கருதப்படுவதால் சிறந்த நரம்பு சத்து மருந்தாக கருதப்படுகிறது.
அரைக்கீரை நோய்களுக்கு சிறந்த நிவாரணி
அரைக்கீரை தென்னிந்தியாவில் மிகவும் விரும்பப்படும் கீரை வகைகளில் அரை கீரையும் ஒன்று. சிறந்த மருத்துவ குணம் உடையது. நடுக்கம், மூட்டு வலி, இருமல், காய்ச்சல், முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணி. மலட்டுத் தன்மையை நீக்குகிறது.
நார்ச்சத்து உள்ள பார்லி
பார்லி ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவை 17 சதவீதம் அளவுக்கு குறைத்து விடும். நம் உடம்பில் உள்ள சர்க்கரை, இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றை விட அதிக நார்ச்சத்து உள்ள உணவு பார்லி.
உடல் வலிமைக்கு கருப்பு உளுந்து
கருப்பு உளுந்து உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. உடல் வீரியத்தை மிகுதிப்படுத்தும். சளியை நீக்க உதவுகிறது. மூட்டுவலியை குணப்படுத்தும். தாய்ப்பாலை அதிகரிக்கிறது. உளுந்து மெதுவாக செரிக்கும் தன்மை கொண்டவை.
மருத்துவ குணமுள்ள சுரைக்காய்
சுரைக்காய் சாதாரண மனிதர்களுக்கு மருத்துவ குணமுள்ள உணவாக விளங்குவது சுரைக்காய். சுரைக்காய் உடல் வலிமை, வீரம், திறன் தரவல்லது. வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு இது நல்லதல்ல. கருவுற்ற பெண்களின் கருப்பையை இது காப்பதால் இவர்களுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது.