ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

உடல் நலத்தைப் பெற

உயிர் உள்ள பாக்டீரியாக்கள் இருப்பதால் நன்மை அதிகம் காணப்படும் தயிர் பயன்படுத்துவதால் பல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. விட்டமின் பி சத்து அதிகம் உள்ளது. கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், வயிற்றுக்கடுப்பு, ரத்த சோகை, பசியின்மை, வாயுத்தொல்லை போன்றவற்றை வெற்றிகரமாக குணப்படுத்த உதவுகிறது.

  • உயிர் உள்ள பாக்டீரியாக்கள் இருப்பதால் நன்மை அதிகம் காணப்படும்.
  • கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், வயிற்றுக்கடுப்பு, ரத்த சோகை, பசியின்மை, வாயுத்தொல்லை குணப்படுத்த தயிர் உதவுகிறது.
  • இருமல், ரத்த சோகை, சிறுநீர் தொல்லைகள், வயிற்றுக் கடுப்பு, மூலம், தோல் நோய்கள், தொழுநோய் போன்ற நோய்களை குணப்படுத்த மோர் உதவுகிறது.

மண்ணுலகின் அமிர்தம்

மோர் விண்ணுலகின் அமிர்தம் போல், மண்ணுலகின் அமிர்தம் மோர் என்று சொல்வார்கள். உடல் நலத்தைப் பொறுத்தவரை மோர் மிகச் சிறந்த உணவு. இருமல், ரத்த சோகை, சிறுநீர் தொல்லைகள், வயிற்றுக் கடுப்பு, மூலம், தோல் நோய்கள், தொழுநோய் போன்ற நோய்களை குணப்படுத்த மோர் உதவுகிறது.

நினைவாற்றல், புத்திக்கூர்மை

வெண்ணெய், பசு நெய், உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும். செரிமானத்தை தூண்டுகிறது. நினைவாற்றல், புத்திக்கூர்மை, அறிவு அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. இதயத்துக்கு நல்லது. உடல் பலத்தைக் கூட்டும். எலும்புருக்கி. மூச்சுத் தடை, இருமல், பலவீனம், மூலம், குடல், பூச்சி தொல்லை குணப்படுத்த உதவுகிறது. எருமை நெய், கொழுப்பு, சளி, வாயு தொல்லை, கீழ் காற்று போக்கு ஆகியவற்றை அதிகமாக்கும்.

உள்ளுறுப்புகளை தூய்மை செய்ய

முட்டைக்கோஸ் பற்கள் தலைமுடி, மூட்டு வலி, எலும்பு ஆகியவற்றிற்கு நல்லது. பச்சை முட்டை கோஸ் சாறு, குடல் புண்ணையும், அமிலத் தன்மையையும் குணப்படுத்தும். மருந்தாக உதவுகிறது. மிகச் சிறந்த காய்கறி. உணவு தசைகளை உறுதியாக்கி உள்ளுறுப்புகளை தூய்மை செய்ய உதவுகிறது. கேரட் சாறுடன், முட்டைகோஸ் சாறையும் கலந்து உண்பதால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

எலுமிச்சைச் சாறுடன், முட்டைகோசு சாறு கலந்து குடிக்க உடம்பு குளிர்ச்சியாகும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். கல்லீரலில் பித்தப்பையில் படிந்துள்ள சடலத்தை தூய்மைப்படுத்துகிறது. மாலைக்கண் நோய்க்கு நல்ல மருந்து ரத்தசோகை, அமிலத்தன்மை, மூட்டுவலி ஆகியவை கேரட் உண்பதால் குணமாகிறது. மேலும் இதயத்துக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *