ஹைபிரிட் கலப்பின உணவுகள் சத்து மிக்கவையா! இவற்றை சாப்பிடலாமா?
இயற்கையாக விளையும் தாவரங்களைப் போன்ற சத்தான காய்கறிகளை கொடுக்க முடியுமா என்றால் அதைவிட சிறப்பான முறையில் சத்தான உணவுகளை பெறலாம். விஞ்ஞானிகள் சூரிய வழங்கல் மற்றும் வேர் அமைப்புகளை சிறப்பாக பயன்படுத்தி உருவாக்குவதில் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உருவாகின்றன.
இவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது. இதைப் பற்றி ஆராய்ச்சிகள், ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன? இயற்கையாக விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் தான் உடலுக்கு நல்லது. அதைத் தவிர ரசாயன உரங்கள் போட்டு வளர்த்த செடிகள் மரங்கள் போலத்தான் கலப்பின தாவரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு தீமை விளைவிக்கும் என பெரும்பாலும் கூறக் கேட்டிருப்போம்.
விதையில்லா காய்கறிகளை, பழங்களை பார்க்கும் போது அதில் எந்த சத்தும் இருக்காது என்ற உடனே அதை சாப்பிடுவதை புறக்கணிப்போம். ஹைப்ரிட் என்று சொல்லப்படுகின்ற அல்லது கலப்பின உணவுகள் உண்மையிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையா என்றால் அதற்கு பதில் இல்லை என்பது தான் என்று கூறப்படுகிறது.
கலப்பின தாவரங்கள் என்னவென்று தெரிந்தால் இப்படி சொல்ல மாட்டார்கள். நெருங்கிய தொடர்புடைய அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறும் பொழுது தான் இந்த கலப்பின மாக்கல் நடைபெறுகின்றன. இந்த டெக்னாலஜி உலகில் தான் நடக்கிறது என்றால் அதுவும் இல்லை. இவை பல ஆண்டுகளாக இயற்கையாகவே நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு சாகுபடியிலும் இறுதியில் பன்மடங்கு உற்பத்தியை பெற முடிகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பு மற்றும் தயாரிப்பின் காரணமாகத் தான் இதற்கு விலை சற்று அதிகமாக இருக்கிறதாம். மற்ற படி இந்த காய்கறிகளை மற்ற காய்கறிகளை போல நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சமைத்து சாப்பிட வேண்டியது தான்.
இதில் ஏராளமான ஊட்டச் சத்துக்களும் அடங்கி இருப்பதாக கூறுகின்றனர். கலப்பின வகைகள் மட்டும் இல்லாதிருந்தால் ப்ளாக்பெரி மற்றும் ராஸ்பெரி கலப்பில் உருவான டேபெர்ரி முட்டைக்கோஸ் மற்றும் முள்ளங்கி கலப்பில் உருவான காலம் மற்றும் பாதாமி கலப்பில் உருவான போன்ற பழங்களை நாம் ருசித்து இருக்க முடியாது.
உலக அளவில் பலராலும் பாராட்டப்பட்டவை இவை. காலே மற்றும் ப்ரோகோலியிலிருந்து உருவாக்கப்பட்ட ஊதா நிற காலிஃப்ளவரில் இருக்கும் நன்மைகளை பற்றி அனைவருக்கும் தெரியும். ஊதா நிறம் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்னால் வருகிறது. இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு மருந்தாக சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
மூளையில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற தாவரங்கள் சத்து மிக்கவையாகவும் ஆரோக்கியம் நிறைந்தவையாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் ஹைபிரிட் உணவுகளை பார்த்து பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.