மனைவிக்கு மரியாதை செய்து மெழுகு சிலை
கணவனே கண் கண்ட தெய்வம் நாம் பார்த்திருப்போம் ஆனால் ஒரு சாமானியர் தன் மனைவிக்கு மெழுகு சிலை செய்து புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். மனைவிக்கு மரியாதை உலகம் போற்றும் இந்த நேரத்தில் மனைவிக்கு மெழுகு சிலை வைத்துக் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌரவம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் அவர்கள் அவர் தன்னுடைய வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் மனைவி உயிருடன் இல்லை என்பது என்பதால் அவரைப் போலவே எனது சிலையை உருவாக்கி மனைவியை அமரச்செய்து மனைவிக்குப் பிடித்த உடை அணிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மனைவியை இந்த மனிதர் நீ எந்த அளவிற்கு மதிப்பு கொடுத்து அன்பு செய்திருப்பாரோ அவை அனைத்தையும் அவர் மனைவி மெழுகு சிலை அருகில் அமரும் பொழுது தெரிகின்றது. சீனிவாச குப்தாவுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். அப்பா அம்மா அருகில் இவர்களும் அந்த நிகழ்வை மெய்சிலிர்த்துப் பார்த்தனர். தந்தையின் மெனகெடல் தாயிற்காக அவர் காட்டிய நேசம், தாயின் சிரித்த முகம் அன்பு பாராட்டுவது கனிவான இந்தத் தம்பதியர் வாழ்த்துவோம்.
இன்றைய அவசர உலகத்தில் நாம் பலவித டெக்னாலஜி உலகில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் இந்த அதிவேக பயணத்தில் நாம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரம் என்றேன் நிற்கின்றேன். ஆனால் இந்தத் தம்பதியினர் கொண்டிருக்கும் அன்பு உண்மையில் மெய்சிலிர்க்க வைத்து இருக்கின்றது. தனது அன்பு மனைவியைச் சிரித்த முகத்தோடு அழகு சிலை படைத்த அந்த மாமனிதர் இன்று மக்களால் மதித்து போற்றப்படுகின்றார்.
இது போன்ற நிகழ்வுகள் வாழ்வின் துணையாக இருப்பவர்கள் என்றும் எவரையும் மறக்கமாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அன்பு ஒன்றே போதும் அது உலகத்தை ஆள வைக்கும் என்பதற்கு இவர் சாட்சியாக இருக்கின்றார். அவர் வீட்டுப் பெண் பிள்ளைகள் தாய் தந்தையருடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி கொண்டாடினர் ஆசீர்வாதங்களையும் பெற்றனர்.