செய்திகள்தேசியம்

நிரம்பி வழிந்த கேளிக்கை கொண்டாட்டத்துடன் வூகான் மக்கள்

சீனாவில் தற்போது உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாத் துறையை மேம்படுத்த சில சலுகைகளையும் மாகாண அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளன.

76 நாள் ஊரடங்கு பிறகு கடந்த ஜூன் மாதம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது தீம்பார்க். 50 சதவிகித பார்வையாளரின் வருகை இந்த தீம் பார்க்கில் பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நுழைவு கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அங்குள்ள பிரபலமான மாயா பீச் வாட்டர் தீம் பார்க்கில் மக்கள் அதிக அளவில் குடிநீர் சாகச விளையாட்டுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியில் கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவசம் பயன்படுத்துவது மாதிரியான கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்து அங்கு அமைந்துள்ள வாட்டர் அம்யூஸ்மாண்ட் பார்க்கில் கூடி கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

தற்போது சீனாவில் வைரஸ்களின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வூகான் நகரில் இருந்து தான் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவல் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *