அழகான கூந்தலைப் பெற விரும்புபவரா? உங்கள் கனவு நினைவாக!
பெண்களுக்குரிய பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் முடி கொட்டுதல். பொடுகுத் தொல்லை, வெள்ளை முடி, இப்படி முடிகளில் பல பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. கேரளத்து பெண்கள் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்தாலும் தினந்தோறும் தலையை வெறும் நீரில் அலசுவது தான் அவர்களுக்கு ஆரோக்கியமான கூந்தல் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சீகக்காய் உபயோகப்படுத்துவார்கள்.
நாம் உபயோகிக்கும் ஷாம்புகளால் முடி வரட்சி அடைய கூடும். இந்த வறட்சியை போக்க கூடுதலாக தலையில் சீபம் அதிகரிக்க ஆரம்பிக்கும். சீபம் சுரக்க சுரக்க வறட்சியான கூந்தல் மென்மையாக மாறும். ஷாம்பு போடாமல் வெறும் நீரில் கூந்தலை அலசும் போது தலை சருமத்தில் இருக்கும் பிஹெச் அளவுகளைக் கட்டுக்குள் வைக்க தலையிலிருந்து சுரக்கும் சீபம் வேகமாக செயல்படும். இதனால் கூந்தல் மென்மையாக மாறும்.
ஷாம்புவில் இருக்கும் ரசாயனம் தலையில் ஸ்கார்ப் பகுதியில் அரிப்பும் எரிச்சலையும் உண்டாக்கும் பிரச்சனை இருக்காது. முடி உதிர்வுக்கு ஒன்று, இந்த எண்ணைப்பசை ஒன்று, என்று மாறி மாறி ஷாம்புகளை பயன்படுத்த வேண்டி இருக்காது. பெருமளவு ரசாயனம் குறையும் போது கூந்தல் ஆரோக்கியம் நிச்சயமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெரும் தலையில் கூந்தலை அலசி எடுப்பதால் இந்த வறட்சி எப்போதுமே கூந்தலை பெற்று விடாது. ஷாம்பு உபயோகிக்கும் போது வரட்சியை நீக்குவதற்காக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். பிரத்தியேகமான மாய்ச்சுரைசர் பயன்படுத்தினாலும் தலையில் பிசுபிசுப்பு உண்டாகும். வெறும் நீரில் தலையை அலசுவதே போதுமானது.
நீரை கொதிக்க வைத்து இறக்கி ஆறிய பிறகு பயன்படுத்தினால் தண்ணீரில் அளவு குறையக் கூடும். அதே நேரம் வெந்நீரில் குளிக்கக் கூடாது. அதிக சூடான நீர் கூந்தலின் வேர்கள் வலுவிழக்கச் செய்து விடும். அதனால் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் எப்போதுமே நன்மை தரக் கூடியது. தலைக் குளியலுக்கு சீயக்காயும், சருமத்துக்கு குளியல் பொடியும் பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள்.
நாளடைவில் தலைக்கு ஷாம்பு வரத் துவங்கியதால் பலவிதமான ரகங்கள் கிடைக்கிறது. ஷாம்புவில் ரசாயனம் நிறைந்த இவை கூந்தலின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை காட்டிலும். பெரும்பாலும் மாறிமாறி பயன்படுத்தும் ஷாம்பு வகைகள் முடி உதிர்வை ஊக்குவிக்கும். வறட்சியை உண்டாக்கும். கூடவே முடி வளர்ச்சியையும் தடுத்து விடும். இதனால் அழகான கூந்தலை விரும்புவர்களுக்கு இது கனவாகவே மாறி விடவும் வாய்ப்புள்ளது.