செய்திகள்தேசியம்

போர் என்பது அவ்வளவு எளிதான விஷயமா என்ன?

போர் என்பது அவ்வளவு எளிதான விஷயமா என்ன?

இன்று இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விடுவார் என்னும் #வீ வான்ட் வார் என்று பலர் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

போர் என்பது அவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய இளக்காரமாகப் ஆகிவிட்டது.

போர் என்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?

இப்போது அவர்கள் விரும்பும்படி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் நடந்தால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா?

எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சிறிய நாடாக இருந்தாலும் போர் என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் உள்கட்டுமான வசதியும் அப்படியே சீர்குலைக்கும்.

யோசியுங்கள் :

நமது இந்திய நாடு ஏரியிலிருந்து இப்போதுதான் நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டிற்கு எப்போ வர வேண்டிய பாலங்களும் மேம்பாலங்களும் இப்போதுதான் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கிறது. இப்போது போர் என்று ஒன்று நடந்தால் அடுத்து நமது முன்னேற்றங்கள் பெரிதும் தடைபடும்.

ஏன் என்கிறீர்களா நமது நாட்டில் உள்கட்டுமான வசதிகள் வைத்திருக்கும் படங்கள் எல்லாம் போர் நடத்தவே செலவாகிவிடும் போர் என்றால் போர் வீரர்களை தயார்படுத்த வேண்டும் உபகரணங்கள் வாங்க வேண்டும் அவர்களுக்கான செலவு செய்ய வேண்டும் போல் நடிப்பவர்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் இது எல்லாம் pubg யில் வருவது போல பட்டு பட்டு என்று சுட்டுவிட்டு “வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் ” என்று கூறுவது போல கிடையாது.

போர் என்றால் உண்மையான போர் ரத்தம் சதை என்று கொடுமைதான் அங்கு நிறைய இருக்கிறது.

இரு நாடுகள் என்று சண்டை போடும் ஒரு வாரம் கழித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கைகொடுக்கும் தேவையில்லாமல் வறட்டு கௌரவத்திற்காக வீரர்கள் பலியாவது என்பது பெரிய கொடுமை.

எந்த நாடாக இருந்தாலும் அதுவும் நமது போர் என்பது கொடுமையான விஷயம் தான்.

அதுவும் நம்மை போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு போர் என்பது காதிலே விடக்கூடாத ஒரு வார்த்தை.

அதற்காக நான் பயந்து பின்வாங்க வேண்டும் என்கிற அர்த்தம் எல்லாம் கொஞ்சமும் கிடையாது.

இப்போது நடந்து கொண்டிருப்பது கோழைத்தனமான தாக்குதல்கள் அதாவது கட்டிகள் கம்பியை சுத்தி வீரர்களை காயப்படுத்துகிறார்கள் கல்லால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நமது வீரர்கள் தக்க பதிலடியை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆயுதத்தை பயன்படுத்தி அவர்கள் பலமுறை யோசிப்பார்கள் ஏனென்றால் நமது இந்திய ராணுவத்தின் பலம் அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் மோடியை பிடிக்கவில்லை பிஜேபி பிடிக்கவில்லை என்றால் இந்தியா சீனாவுடன் தோல்வி அடைய வேண்டும் என்று விரும்பி பலர் சமூக வலைதளங்களில் பதிவுகளை ஏற்படுத்துகிறார்கள்.

அடடா என்ன ஒரு நாட்டுப்பற்று அதுவும் இந்த காலத்து இளைஞர்களுக்கு இருக்க மாற்றப்பட்டு அப்பப்ப மெய்சிலிர்க்க வைக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் நமது ராணுவ வீரர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது அவர்கள் படும் கஷ்டம் என்னவென்றால் துளிகூட புரியாது ராணுவத்தைப் பற்றிய சினிமா படம் எடுத்தால் கூட டிரையாருக்கு , போரா இருக்கு என்று கூறி அந்த படத்தை நாம் வெற்றி பெற கூட செய்வதில்லை.

எதுவுமே முழுவதும் தெரிந்து கொள்வது கிடையாது என்ன நடக்கிறது அதற்கு தகுந்தாற்போல நான்கு சீட்டுகளையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டால் சரியாகி விட்டது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள் இந்த நிலையை முதலில் மாற வேண்டும் எந்த விஷயமாக இருந்தாலும் முதலில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா என்றைக்குமே போர்வை தானாக தேடி சென்றது கிடையவே கிடையாது ஆனால் வந்தால் வாலை ஒட்ட நறுக்காமல் விட்டதும் கிடையாது.

போர் வரும் நேரத்தில் கண்டிப்பாக வரத்தான் போகிறது…! ஆனால் இப்போதைக்கு அதற்கு அவசரப் படாதீர்கள், ஆசைப்படாதீர்கள்… ப்ளீஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *