அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

பொலிவு தரும் முகம் பெற கிச்சன் வாங்க

பல நேரங்களில் நம் முகம் அழுத்தம் காரணமாக சோர்வடைந்து விடும். முகம் பார்க்க சோர்வடைந்த தோற்றம் தரும். முகத்தை கண்ணாடியில் பார்த்தால் சோர்வாக இருப்பதை பார்த்தவுடன் ஏதாவது க்ரீம் வாங்கி முயற்சி செய்வோம். முகம் பொலிவு பெற க்ரீம் அப்ளை செய்ய வேண்டியதில்லை. இதற்காக கடைக்கு செல்ல வேண்டாம். கடைக்கு செல்லும் முன் சற்று உங்கள் கிச்சனுக்கு சென்று பாருங்கள்.

  • முகம் பொலிவு பெற க்ரீம் அப்ளை செய்ய வேண்டியதில்லை.
  • கிச்சனில் உள்ள பொருட்களை வைத்தே உடனடியாக நம் முகப்பொலிவு பெற முடியும்.

உடனடியாக நம் முகப்பொலிவு பெற

கிச்சனில் உள்ள பொருட்களை வைத்தே உடனடியாக நம் முகப்பொலிவு பெற முடியும். நம் வீட்டில் இருக்கக்கூடிய தயிர், முட்டைகோஸ், ஆலிவ் ஆயில், தேங்காய் பால், அண்ணாச்சி பழம், இளநீர், ஆப்பிள் சைடர் விநிகர், கசகசா, பால், தக்காளி ஜூஸ், கடலைமாவு, பப்பாளி போன்ற பொருட்கள் வீட்டிலேயே வைத்திருப்போம்.

முகம் பளிச்சென்று இருக்க

இவற்றில் எது வேண்டுமானாலும் நம் முகத்திற்கு அப்ளை செய்யலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இவற்றை அப்ளை செய்து காய வைத்து கழுவலாம். எதை செய்தாலும் உடனடியாக பலன் கிடைக்கும். கசகசாவை சிறிது நேரம் ஊறவைத்து பால் விட்டு மையாக அரைத்து முகத்திற்கு அப்ளை செய்வதால் முகம் பளிச்சென்று இருக்கும்.

புதுப்பொலிவுடன் தோற்றம்

தேங்காய்ப்பால், தக்காளி ஜூஸ், பப்பாளி விழுது, ஆப்பிள் விழுது ஏதாவது ஒன்றுடன் தேங்காய்ப்பால், தக்காளி ஜூஸ் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு, தயிர் கலந்து கலவையை முகத்திற்கு அப்ளை செய்து கழுவலாம். தயிரையும், வெள்ளரிக் காயையும் சேர்த்து அரைத்து முகத்தில் அப்ளை செய்யும் போது புதுப்பொலிவுடன் தோற்றம் அளிப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *