விண்ணைத்தாண்டி வருவாயா நாயகன் நாயகி திருமணமா
திரையுலகம்! நடிகர்களும் ரசிகர்களும் சேர்ந்ததுதான் திரையுலகம். நடிகர்களை ரசிக்க ரசிகர்கள் இல்லையென்றால் திரையுலகம் இயங்க முடியுமா!
ரசிகர்களின் கணக்கை வைத்து நடிகர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டியின் முடிவு நிர்ணயிக்கப்படுகிறது. எம்ஜிஆர்-சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய்-தல அஜித் குமார் இவ்வாறு இரட்டை மோதலுக்குப் பின்பு விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு , ஜெயம் ரவி, ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
கதாநாயகன் என்று இருவர் போட்டி மாறி பலருக்கு மத்தியில் போட்டி நிலவினாலும் ரசிகர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கதாநாயகர்களை ரசிக்கின்றனர்.
சிம்பு
சிலம்பரசன் (எ) சிம்பு தன்னகத்தே மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நட்சத்திரம். காக்கிச் சட்டையும் காதலையும் இணைந்து இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனன் இளம் வயது சாதாரண மக்களிடையே ததும்பும் காதலையும் சித்தரிக்க துவங்கியதில் கார்த்திக் ஜெஸ்ஸி ஜோடி சூப்பர் ஹிட். இவர் தந்த படங்கள் அனைத்துமே கெத்தாக இருந்தாலும் சிம்பு த்ரிஷா ஜோடி மிகவும் யதார்த்தமாக இருந்தது.
வெள்ளித்திரை சூப்பரான ஜோடியான சிம்பு திரிஷாவிற்கு திருமணம் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. ஆஹா இவர்கள் இணைந்தார் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கனவு முடிவதற்குள் இது வெறும் வதந்தி என்ற செய்தியும் சமூக வலைதளங்களில் பரவி வரத் தொடங்கியது. கொஞ்ச நேரம் கூட ரசிகர்களை சந்தோஷமா இருக்க விட மாட்டீங்களாடா!
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு இந்த வதந்தியை எதுவும் பொருட்படுத்தாமல் இந்த வருடத்தின் இறுதி மாதமான டிசம்பரில் தன்னுடைய திருமண செய்தியை வெளியிடுவதாக கூறியுள்ளார். ஹா யார் பொண்ணுன்னு தெரியலையே!
மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா, மனோஜ் பாரதிராஜா, டானியல் அனி போப் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் சிம்புக்கு 2 திரைப்படங்கள் காத்திருக்க ஐயப்பனும் கோசியும் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க உள்ளதாக பேச்சு வாக்கில் ஒரு செய்தி வந்து போகிறது. மொத்தத்தில் இந்த ஆண்டு சிம்பு ரசிகர்களுக்கு பிஸியாக இருக்க போகிறது.