விழிகளிலே விழிகளிலே… குள்ளநரி கூட்டம்
குள்ளநரி கூட்டம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சிறீபாலாஜி இயக்கியிருந்தார். விஷ்ணு, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் . இதன் இசையமைப்பாளர் விி. செல்வகணேஷ்.
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே…
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ…
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இது வரையில் எனக்கு இது போல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை
புதியதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே ..
மேலும் படிக்க : நடிகை அமலா பாலின் ஆத்திரமான பதிவு!
சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
மொத்தில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
இது என்ன கனவா நிஜமா
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன பகலா இரவா
இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே…
விழிகளிலே விழிகளிலே….
மேலும் படிக்க : யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே…