சினிமா

விஸ்வாசம் அஜித்தின் மகளா இவர்!

ரீல் லைஃப்யில் நடிகர் அஜித் குமாரின் மகளாக வரும் அனிகா சுரேந்திரன் புது கெட்டப். என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித் குமாரின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் தான் அனிகா சுரேந்திரன்.

அனிகா சுரேந்திரன் கேரளத்து குழந்தை நட்சத்திரம். 15 வயதுள்ள அனிகா மலையாளத் திரையுலகில் பிரபலமானவராக திகழ்ந்தாலும் தமிழ் திரையுலகில் அஜித்தின் மகளாகவே தென்படுகிறார்.

அஜித்துக்கும் அனிகாவுக்கும் இருக்கிற காமினேஷன் ஒரு தனி ரசிகர் கூட்டத்தை திரட்டி இருக்கு. விஸ்வாசம் படத்தை பிடிக்காத பலரும், தலய வெறுக்கும் தளபதி ரசிகர்களும் கூட ‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு தன் மகளுடன் ஆட இருப்பார்கள். அந்தப் படத்தின் கிளைமாக்சில் அணிகா ‘அப்பா’ என்று அஜித்தை அழைக்க ‘என் சாமி’ என்று அவர் மறுமொழி கூற பார்ப்பவரின் கண்கள் வேர்த்து விட்டது.

அதே போல் என்னை அறிந்தால் படத்தில் வரும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலில் தாயை இழந்து பெண்ணை தனித்துவமாக வளர்க்கும் தந்தையின் உணர்வை அறிந்தவர்கள் அவருடன் வாழ்ந்திருப்பார்கள்.

அனிகாவின் தமிழ் திரை பயணத்தில் முக்கியமானது ‘ராணி’ என்கிற நாடக வலை தொடர்க்காட்சி. மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நாடகப்படம் ராணி. இந்தப் படத்தில் அனிகா குழந்தை பருவத்தில் ஜெ ஜெயலலிதா அவர்களின் பாணியை நடித்துள்ளார். பள்ளி உடையில் ரெட்டை ஜடையில் மேடைப் பேச்சாளராக அசத்தி இருப்பார்.

போட்டோ ஷூட்

புசு புசு கன்னத்துடன் வரும் மங்கை அனிகாவின் புது உருவத்தைப் பாருங்கள். மங்கைப் பருவத்தில் இருந்து மடந்தை பருவத்திற்கு தொடும் அந்த அழகை ரசியுங்கள்.

பெரும்பாலானோர் புகைப்படம் பிடிக்க கேண்டிட் போஸுக்கு திண்டாடும் மக்கள் நடுவில் அனிகா எவ்வளவு அழகாக அற்புதமாக இயற்கையாக போஸ் தந்துள்ளார். தன் காதுகளை நெருடும் விரல்கள் ஒருபுறம் மற்றொருபுறம் இவர் எதையோ ரசிக்க நாம் அவரின் அழகை ரசிக்கும் படி புகைப்படம் டக்கராக வந்துள்ளது.

கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை கலைஞர் விருதைப் பெற்ற அனிகா கேரள மாநிலத்தின் ஆடை அணி அலங்காரத்துடன் அட்டகாசமாக போட்டோ ஷூட் தந்துள்ளார். கேரளாவின் அழகான ஆங்காங்கே தென்படும் குட்டைகளும் பச்சை பசேலென்ற மர பகுதியின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வா ரே வா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *