கோடை விடுமுறையை கழிக்க அற்புதமான 5 இடங்கள்..!
கோடையை விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க இந்தியாவில் உள்ள அற்புதமான இடங்களை இங்கு பார்க்கலாம்
1-டார்ஜிலிங்:-
மேற்கு வங்காளத்தில் உள்ள கம்பீரமான மலை நகரம், கோடை விடுமுறையை கழிக்க சரியான இடம் இது. இந்த நகரம் கஞ்சன்ஜங்கா மலைத்தொடர் மற்றும் அழகான தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. பச்சை தோட்டங்கள் மற்றும் காடுகளின் வழியாக செல்லும் ரயில் பயணம் இங்குள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். சொல்லப்போனால், பூமியின் சொர்க்கம் இது என பயணிகள் கூறி வருகின்றனர்.
2-மூணாறு:-
கேரளாவின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று மூணாறு. கோடை காலம் முழுவதும் இதமான வானிலை நிலவும். இது பசுமையான மலைகளால் சூழப்பட்டுள்ளது . தென்மாநிலங்களில் உள்ளவர்கள் குறைந்த செலவில் சிறப்பான அனுபவத்தை பெற விரும்பினால் இந்த இடத்தை தேர்வு செய்யலாம்.
3-ஷில்லாங்:-
மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் வடகிழக்கில் பிரபலமான இடமாகும். இது ஏராளமான பசுமை, ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கொண்டது. யானை நீர்வீழ்ச்சி, ஷில்லாங் பீக், ஸ்வீட் ஃபால்ஸ், உமியம் ஏரி மற்றும் பல முக்கிய இடங்களை கொண்ட நகரம் இது. வடகிழக்கு மாநிலங்களில் அழகான சுற்றுதலம் இதுவாகும்.
4-லடாக்:-
இந்தியாவில் ஆண்டு முழுவதும் குளிர்சியாக உள்ள இடம் லடாக். பைக் ரேஸ் பிரியர்களுக்கு இது அற்புதமான இடம்.
வாகன ஓட்டிகள் நிறைய சாகசங்களைச் செய்யலாம், இங்கு திபெத்திய கலாச்சாரத்தை அனுபவிக்கலாம், ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ ஏரி, சோ மோரிரி மற்றும் ஹெமிஸ் தேசியப் பூங்காவில் விடுமுறை நாட்களை கழிக்கலாம்.
5-அவுலி:-
இமயமலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக ஆலி உள்ளது. இவற்றில் ஜோசிமாத் மலையேற்றப் பாதை சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலமானது. காமட், நந்தா தேவி, மனா பர்வதம் மற்றும் துனாகிரி ஆகிய சிகரங்களின் அழகிய காட்சிகளை இந்த பிரதேசத்தில் மலையேற்றம் செய்திடும் வேளைகளில் காணலாம்.