பேட்மிட்டன் வீராங்கனையும் ராட்சசண் நாயகனும் இணைந்தனர்
வெண்ணிலா கபடிக்குழு நாயகனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா நிச்சயதார்த்தம் சென்னையில் இனிதே முடிந்தது.
ராட்சசண்
விஷ்ணு விஷாலுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் திரையுலகில் வெற்றி நாயகரா வலம் வருகிறார். வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக்கூட்டம், ஜீவா, சிலுக்குவார்பட்டி சிங்கம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல ஜாலியான கதாபாத்திரங்களில் நடித்து ராட்சசண் என்னும் சூப்பர் ஹிட்டை தந்தவர் விஷ்ணு விஷால்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகமான மக்கள் நிறைய முறை பார்த்த படம் ராட்சசண். பல நாட்களுக்கு அதிகம் பார்க்கப்படும் திரைப் படப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
ஜுவாலா கட்டா
இந்திய விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா; பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்குபவர். இரட்டையர் பேட்மிட்டன் விளையாட்டுகளை 316 போட்டிகளில் பங்குபெற்று இரு பிரிவுகளில் வெற்றி பெற்று உலக அளவில் ஆறாவது இடத்தை பிடித்தவர். இந்தியா அளவில் இந்த சாதனை புரிந்தவர் பலர் இல்லை. அப்படி ஒரு சாதனை படைத்தவர் ஜுவாலா கட்டா.
குண்டே ஜாரி கல்லந்தாயிண்டே என்ற தெலுங்கு காதல் நகைச்சுவை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் ஜுவாலா கட்டா.
நிச்சயதார்த்தம்
சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் இருவரை புகைப்படத்தை பகர்ந்தார். அன்று இவ்விருவரும் கேக்குடன் அப்புகைப்படத்தில் காட்சியளித்திருந்தனர். அந்த பதிவில் என்னுடைய பிறந்தநாள் ஆச்சரியம் என்று குறிப்பிட்டிருப்பார் விஷ்ணு விஷால்.
அதனைத் தொடர்ந்து நடந்தது என்ன தெரியுமா!
ஜுவாலா கட்டாவின் பிறந்த நாளில் நிச்சயதார்த்தப் மோத்திரத்துடன் ஆச்சரியப்படுத்தி திருமணத்திற்கு கிரீன் சிக்னல் ஜுவாலா கட்டாவிடமிருந்து பெற்றுள்ளார் விஷ்ணு விஷால்.
சென்னையில் நண்பர்கள் சூழ ஜுவாலா கட்டா பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் அனைவரின் முன்னிலையிலும் அதிரடியாக நடுஇரவில் திட்டமிட்டு ஏற்பாடு செய்த நிச்சயதார்த்த மோதிரத்தை ஜுவாலா கட்டாவை ஆச்சரியப்படுத்தி திருமணத்திற்கு முன்மொழிந்துள்ளார்.
பல காலமாக காதல் உறவில் இருக்கும் இவ்விருவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவர்களது புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். ‘தம்முடைய உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இருந்தாலும் தக்க சமயத்திற்காக காத்திருந்தோம். மேலும் ஜுவாலா கட்டாவை ஆச்சரியப்படுத்த யோசனை செய்து கொண்டிருந்த போது இந்த யோசனை நன்றாக இருக்க அதனை செயல்படுத்தினேன்’ என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘பிறந்த நாளன்று இப்படி ஒரு ஆச்சரியத்தை எதிர்பார்க்கவில்லை. பல நாளாக பேசிக் கொண்டிருந்த எங்கள் உறவு அடுத்த கட்டத்திற்கு செல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்ற ஜுவாலா கட்டாவும் தெரிவித்துள்ளார்.
நண்பர்கள் முன்னிலையில் விஷ்ணு விஷால் நிச்சயதார்த்த மோதிரத்தை கொண்டு ஜுவாலா கட்டாவிடம் முன்மொழிய அவரும் தலையசைக்க இருவரின் திருமணம் கூடிய விரைவில் நடைபெறும்.