திரையுலகின் கபடி நாயகன் விஷ்ணு விஷாலுக்கு ஹாப்பி பர்த்டே
வெண்ணிலா கபடி குழு நாயகனின் பிறந்தநாள் இன்று. வெண்ணிலா கபடி குழு படத்தை விட ராட்சசன் படத்தில் பெரிதளவில் ஹிட்டானார் விஷ்ணு விஷால்.
17 ஜூலை 1984 இல் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். விஷால் என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் விஷ்ணு விஷாலாக திரையுலகில் வலம் வருகிறார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு டி என் சி ஏ என்று சொல்லப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். அவரின் காலில் அடிபட்டதால் தன் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு திரையுலகில் 2009ல் களமிறங்கினார்.

திரையுலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் தான் ஒரு கிரிக்கெட் வீரர் என்னும் முத்திரை மாறாது விளையாடுபவர். ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட் வீரராக இயல்பாக நடித்திருப்மார். அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம்.
கொரோனாவால் ஊரடங்கு இடப்பட்டு அனைவரும் வீட்டில் முடக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில். ஒரு விளையாட்டு வீரராக தன்னை நன்கு ஆரோக்கியமாக பார்த்துக்கொண்டு உடல் கட்டமைப்புடன் காட்சியளிக்கிறார். அடுத்த படத்திற்கான கெட்டப்பாகவும் இருக்கலாம்.

36 வயதுடைய இளம் நடிகரான விஷ்ணு விஷாலுக்கு ஹாப்பி பர்த்டே.