விளையாட்டு

அணிகளை எச்சரிக்கும் விராட் கோலி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் அணியினருடன் நேற்று இணைந்துள்ளனர். கேப்டன் விராட் கோலி மற்றும் டீம் இயக்குனர் மைக் ஹெசன் ஆகியோர் நெறி முறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வீரர்களிடம் எடுத்துரைத்தனர்.

நாம் ஒருவர் செய்யும் தவறால் நம்முடைய ஒட்டுமொத்த தொடரும் பாழாகி விடும் என்று நினைப்பதாக கூறியுள்ளனர். ஒருவர் கூட இதை விரும்பக் கூடாது என்றும் பேசினார்கள். யாராவது விதிகளை மீறுகிறார்கள் என்று விராட் கோலி ஹெஸனிடம் கேட்டார் “பிசிசிஐ எழுதியுள்ள ஒரு ஆவணம் நம்மிடம் இருப்பதாகவும். இதன் அடிப்படையில் உங்கள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.

விதிகளை பின்பற்றவில்லை என்றால் ஒட்டுமொத்த அணியும் ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும். தயவுசெய்து அத்தகைய நெருக்கடிகள் நமது அணியை தள்ளி விட வேண்டாம்” என்று கேசன் அணி வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து அணி கேப்டன் விராட்கோலி வீரர்களிடம் பேசினார்.

யாராவது விதிகளை மீறினால், அது முழு அணியையும் வீழ்த்துவது ஆகும். ஏனெனில் இதில் அந்த வீரரை இழக்க முடியாத போது போட்டியில் ஒரு கட்டத்தில் அது நிகழக்கூடும். என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கிறதோ? அதை நான் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வளையம் என்பதில் நாம் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

எந்த நேரத்திலும் இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த தொடரும் பாழாகி விடும் என்றும் ஒருவர் கூட இதை விரும்பக் கூடாது” என்றார். இவ்வாறு ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று விராட் கோலி அணி வீரர்களை எச்சரித்தார்.

ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகளும் அரபு அமீரகத்திற்கு சென்று அடைந்து விட்டன. ஹோட்டல்களிலும், ரிசார்ட்களிலும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வீரர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகஸ்ட் 28 முதல் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *