வலைதளங்களில் வைரலாகும் ராஜா ராணி நாயகியின் வைரல் கியூட் புகைப்படம்
ரசிகர்களின் கியூட் நாயகியாக தமிழில் வலம் வந்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நஸ்ரியா. நஸ்ரியாவின் நடிப்பிற்கு இணை நஸ்ரியா தான் என்று கூறும் அளவிற்கு அவர் நடிப்பு திறமையால் அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்தார் க்யூட்டான நடிப்பிற்கும் ஸ்வீட்டான பேச்சுக்கும் சொந்தக்காரியான நஸ்ரியா தமிழில் நேரம், திருமணம் எனும் நிக்கா, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் என ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அவர் தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ரசிகர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

இவ்வாறு ரசிகர்களின் நாயகியாக வலம் வந்த நஸ்ரியா சில ஆண்டுகளுக்கு முன் மலையாள மற்றும் தமிழ் படங்களில் டாப் ஹீரோக்களுக்கு இணையாக தனது திறமையால் முன்னேறிய முன்னணி நடிகரான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும் இன்றும் காதல் மாறாத ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பின் திரை உலகை விட்டு சற்று விலகி இருந்த நஸ்ரியா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் என்ட்ரி கொடுக்க தொடங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக சூர்யாவின் 43-வது படத்தில் நஸ்ரியா நடித்து வருகிறார். அவரை மீண்டும் திரைப்படங்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து உற்சாகத்தில் மகிழ்ந்து வருகின்றனர்.
நஸ்ரியாவின் மாமனாரான ஃபாசில் மிகச் சிறந்த இயக்குனராக தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் வலம் வருபவர். இவர் தமிழிலும் ஏராளமான ஹிட் படங்களை நமக்காக தந்துள்ளார். சில ஆண்டுகளாக படங்கள் இயக்குவதை தவிர்த்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு நஸ்ரியாவின் குடும்பத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அழகான நினைவுகளும் நபர்களும் நஸ்ரியா குடும்பத்தில் உள்ளனர் இவ்வாறு இருக்க சமூக வலைத்தளங்களில் நஸ்ரியா தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நஸ்ரியாவின் அழகான குடும்ப புகைப்படத்தை பார்த்து அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மிக அழகான குடும்பம் என தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.