சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்

Village style chicken curry: கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி குழம்பு செய்ய நச்சுனு நாலு டிப்ஸ்

அறுசுவையில் அசைவ விருந்து என்று சொன்னாலே நாவில் எச்சில் வரும் அளவிற்கு நான்வெஜ் இன் சுவை நம்மை கட்டி இழுக்கும்.அதுவும் அசைவ பிரியர்கள் புதுவித முறையில் டேஸ்ட்டான டிஷ்களை சாப்பிட வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பார்கள். முன்பெல்லாம் அசைவம் என்றாலே எப்பொழுதாவது பண்டிகை நாட்களில் மட்டுமே செய்வது வழக்கமாக இருந்தது ஆனால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் நாம் நினைத்தவுடன் சென்று சாப்பிடும் வகையில் பல அசைவ கடைகளும் சைவ கடைகளும் வந்துவிட்டன என்னதான் நாம் கடைகளில் சாப்பிட்டாலும் வீட்டில் செய்து சாப்பிடுவது என்பது ஒரு ஸ்பெஷல் தான் அதுவும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அதிகாலையிலேயே சென்று நான்வெஜ் எடுத்து வந்து வீட்டில் செய்து அனைவரும் உட்கார்ந்த சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போடுவது என்பதை நினைத்து பார்த்தாலே அனைவருக்கும் சுகமாகத்தான் இருக்கும்.

இதையெல்லாம் கேட்பதற்கு நன்றாக உள்ளது ஆனால் நான்வெஜ் செய்யும் பெண்களுக்கு எதுவும் சொதப்பாமல் நன்றாக செய்ய வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருப்பர். இனி கவலை வேண்டாம் அசத்தலான முறையில் மிக டேஸ்டாக நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி – 1/2 கிலோ

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்

சோம்புத் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

தேங்காய் – தேவையான அளவு

சோம்பு – 1/2 டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் – 1

நாட்டுக்கோழி குழம்பு செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் போட்டு கோழிக் கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு கறியில் மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து கலக்கி ஒரு 15 நிமிடம் ஊற வைத்து விட வேண்டும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு,சீரகம் ,நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்பு நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து கலக்கி விடவும்.

பின்பு ஊற வைத்த கோழிக் கறி போட்டு 5 நிமிடம் கறியில் உள்ள சாறு அனைத்தும் வெளியில் வந்து இஞ்சும் வரை வேக வைக்க வேண்டும்.பின்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் , மிளகுத் தூள் , சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு அதில் தேங்காய்,பச்சை மிளகாய்,சோம்பு சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து கலக்கி விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.கறி வெந்தவுடன் இறுதியாக அதில் சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விடவும்.

அவ்வளவு தான் மிக அருமையான சுவையில் அனைவரும் விரும்பி உண்ணும் நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *