ஆரோக்கியம்சமையல் குறிப்புமருத்துவம்யூடியூபெர்ஸ்வாழ்க்கை முறை

கிராமத்து ரவா மீன் வருவல்

மீன் பிடிக்காது என்று சொல்லும் நபர்கள் இவ்வுலகில் மிக மிகக் குறைவு தான். மீன் என்று சொல்லும் பொழுது நாவில் அனைவருக்கும் எச்சில் வரும் அதிலும் குறிப்பாக மீன் வருவல் வகை வகையாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். மீன் வெறும் ருசிக்காக மட்டுமல்ல நம் உடலுக்கும் மிகுந்த நன்மைகளை தரக்கூடியது. தொடர்ந்து மீன் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும். உடலில் உள்ள வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். மேலும் உடலுக்கு விட்டமின் சத்துக்களை ஏராளமாக தரும் ஒரு அறுசுவை உணவாக மீன் உள்ளது .

டேஸ்டிலும் சரி ஆரோக்கியத்திலும் சரி இரண்டிலும் மீனை அடிச்சுக்க ஆளே இல்லை. நாம் டாக்டரிடம் சென்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தர சொல்லி சொல்லும் ஒன்று மீன் தான். நாம் மருத்துவமனையின் வாசகங்களிலும் இதை பார்த்திருப்போம். இப்படி நாவிற்கு விருந்து வைக்கும் உடலுக்கு நன்மை தரும் மீனை இன்னும் சுவையாக செய்து சாப்பிடலாம் அந்த ஈஸியான டேஸ்டியான ரெசிபியை செய்யும் முறையை கீழே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன்

கான்பிளவர் மாவு – 1 டீஸ்பூன்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

65 மசாலா -1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

ரவை – 3 டீஸ்பூன்

ரவா மீன் வருவல் செய்யும் முறை

சுவையான ரவா மீன் வருவல் செய்யும் முறையை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் அதே அளவு கான்பிளவர் மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும் பின்பு அதில் ஒரு டீஸ்பூன் அளவு 65 மசாலா அதே அளவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கி கொள்ளவும் நன்றாக கலக்கிய பின் மேலும் அதில் கரம் மசாலா கால் டீஸ்பூன் அளவு, இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் விட்டு மற்றும் கலக்கவும் நன்றாக கலக்கிய மசாலாவில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்த மீன் துண்டுகளை போட்டு நன்றாக திரட்ட வேண்டும் ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் மூடி வைத்து ஊற வைத்து விடுங்கள் ஊறிய பின் மீன் துண்டுகளை எடுத்து மூன்று டீஸ்பூன் அளவு ரவையை எடுத்துக் கொள்ளவும் அதில் மீன் துண்டுகளை பிரட்டி எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் மீன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் மெதுவாக மீன் துண்டுகளை போடவும் ஒருபுறம் நன்றாக வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும் இரண்டு பக்கமும் மொறுமொறுவென்று பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளவும் அவ்வளவுதான் சூடான சுவையான மிகவும் டேஸ்டியான மொறு மொறு ரவா மீன் வருவல் ரெடி…

இதை நீங்கள் செய்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கும் மேலும் இத்தனை சத்துகள் வாய்ந்த உணவை சமைக்க இனி கஷ்டப்படத் தேவையில்லை மிக எளிதான முறையில் இப்படி செய்து கொடுத்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சி அடைவர். நீங்களும் வேலை சுமை இன்றி மகிழ்ச்சியாக சமைத்து சாப்பிடலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *