செம தூளான க/பெ. ரணசிங்கம் விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சூப்பரான புது பட பாடல் இன்று வெளியிடப்பட்டது. க/பெ. ரணசிங்கம் இப்படத்தின் முதல் பாடல் காணொளியாக யூடியூபில் இன்று மாலை வெளியிடப்பட்டது.

க/பெ. ரணசிங்கம்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் படம் க/பெ. ரணசிங்கம். இப்படத்தை கோட்டாபாடி ஜே. ராஜேஷ் தயாரித்து பி. விருமாண்டி இயக்குகிறார். இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிய ஒரே பாடலிலேயே ரசிகர் கூட்டத்தை திரட்டிவிடுவார் போலிருக்கிறதே!

ஒரு வருஷத்துக்கு 6 லிருந்து 8 படங்கள் வெளியிட்டு தள்ளிட்டு இருந்த நடிகர் விஜய்சேதுபதி இந்த வருஷம் பாடல் வெளியீட்டு மட்டும் செய்யறா மாதிரி வச்சு செஞ்சுடிச்சு இந்த கொரோனா. இப்படி பண்ணிட்டீங்களே மா!

ஏப்ரலில் வெளியாக வேண்டிய படத்தின் சூப்பரான துணை நடிகர்கள் இதோ; ரங்கராஜ் பாண்டே, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, சமுத்திரகனி, பூ ராம் என பட்டையை கிளப்பும் பட்டாளத்துடன் ஓடிடியில் களம் இறங்கப்போகிறது என பேசப்படுகிறது.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கை பயணத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட வாழ்க்கை பயணத்தை அடித்தளமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமே க/பெ. ரணசிங்கம்.

க/பெ. ரணசிங்கம் திரையரங்குகளின் திறப்பிற்காக காத்திருக்காமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

தர்மதுரை படத்தில் இணயம் முடியாத ஜோடி க/பெ. ரணசிங்கம் படத்தில் இணைவது மக்களின் மத்தியில் பெரிதாக வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான இப்படப் பாடல் அருமையான கிராமப்புற சூழலுடன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களுடனும் மற்றும் சிறு சிறு காணொளிகளுடனும் படுதுளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்களை கண்டு ரசியுங்கள்.