முரளிதரனின் 800 படத்தில் நடிக்கும் விஜய சேதுபதி!
முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதி இருவரும் தமிழ்மொழியில் மிகப் பிரபலமானவர்கள் ஆவார்கள். இந்தி, பெங்காலி, சிங்கள மொழிகளிலும் முத்தையா முரளிதரன் படம் வெளியாகும். முத்தையா முரளிதரன் பயோபிக் டப்பிங் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
- முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளனர்.
- விஜய சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளார்.
- ஒரு தமிழனின் வாழ்க்கையை இன்னொரு தமிழன் நடிப்பது பெருமையின் உச்சம் ஆகும்.
முத்தையா முரளிதரன் , விஜய சேதுபதி
முத்தையா முரளிதரன் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இந்த படத்தை வெற்றிகரமாக உருவாக்க உதவுவார்கள் கிரிக்கெட்டின் மிக அற்புதமான ஸ்பின் வீரராக முத்தையா முரளிதரன் இருந்திருக்கின்றார். அவருடைய வாழ்வியலை படமாக எடுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.
படப்பிடிப்பு
2021 ஆம் ஆண்டு இந்தப் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது முத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி இருவருமே மிகவு மக்களிடையே பிரசித்தி பெற்றவர்கள். முரளிதரனிடம் பேசும் வாய்ப்பை விஜய சேதுபதிக்கு கிடைத்திருக்கின்றது.
முரளிதரன் பயோபிக்
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் வெளி வர இருக்கின்றதாகத் தகவல்கள் கிடைத்தது, எனது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி சரியான தேர்வாக இருப்பார் என முத்தையா முரளிதரன் நம்புவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் படிக்க : வரலாற்றின் சத்தமின்றி சாதித்தவர்களின் ஒருவராக விஜய் சேதுபதி 800 சினிமா
விஜய சேதுபதியை நம்பும் முரளிதரன்
விஜய சேதுபதி திறமையான நடிகர் , அவர் மீது நம்பிக்கை இருக்கின்றது என்று முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியிருக்கிறார். முத்தையா முரளிதரன் அவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் விஜய்சேதுபதி கூறுகையில் அவருடைய கதையைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். முரளிதரன் பயோபிக்கை சிறப்பாக நடிப்பார் என்று நம்பபடுகின்றது.
கிரிக்கெட் உலகில் முரளிதரன்
முரளிதரனுக்கு எப்போதும் கிரிக்கெட் உலகில் தனி வரவேற்பு உண்டு. அவரது ரசிகர்கள் படத்திலிருந்து ரசித்த மாதிரி படத்தையும் ரசிப்பார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு தமிழனின் சாதனையை இன்னொரு தமிழன் நடிக்கும்பொழுது அது ரம்மியமாக இருக்கும். மக்களே ரெடியா இருங்க
மேலும் படிக்க : சினிமா ஃபீல்டுக்கு வந்த சோதனை.. தியேட்டர்கள் அமெரிக்காவில் மூடப்படுகிறது.