Vijay TV serial update: சினிமாவை மிஞ்சிய சீரியல்; வலையில் சிக்கிய கொலைகாரன் இனி நடக்கப் போவது என்ன???
நமது விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கும் சீரியலுக்கும் பஞ்சமே இல்லை. தமிழ்நாட்டில் பாதி பேரின் வீட்டில் முழு நேரம் ஓடும் சேனலாக விஜய் டிவி உள்ளது. இவ்வாறு முன்னணி சேனலாக இருக்கும் விஜய் டிவியில் ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு வாரம் போட்டி போட்டுக் கொண்டு டிஆர்பி யில் எகிறி வருகிறது. இதில் நமது பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று. ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நாடகம் குடும்ப கதையை எடுத்துரைக்கும் நாடகமாக உள்ளது. மேலும் குடும்பத்தில் என்னதான் ஒற்றுமை இருந்தாலும் அதில் என்னென்ன சிக்கல்கள் வரும் எவ்வாறு சிக்கல் வரும் என்பதை குறித்தும் தெளிவாக கூறுவதால் இந்த நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம்.
கோமா நிலையில் இருக்கும் மீனாவின் அப்பா
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் சிறிது காலமாக கோமாவில் இருந்து வருகிறார்.இவர் உயிர்ப்பிழைத்து விடுவாரா அல்லது அப்படியே இறந்து விடுவாரா என்று மீனா அவரது மனைவி என அனைவரும் கண்ணீர் விட்டு வந்தனர். ஆனால் இவரின் இந்த நிலைக்கு காரணம் ஜீவாவும் கதிரும்தான் என நினைத்து மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். அத்தனை பேரும் என்ன சொன்னாலும் கேட்காமல் எனக்கு என்னோட அப்பா தான் முக்கியம் இனிமேல் கதிர நான் என் வாழ்க்கையில பார்க்கவே கூடாது என்று திட்டிவிட்டு சென்றுவிட்டார். பிரசாந்தின் பேச்சுகளை நம்பி மீனா எடுத்த இந்த முடிவுகளால் ஏற்படும் விபரீதத்தை அவர் அப்போது அறியவில்லை.
பிரசாந்தின் கொடூரத்தை அறியும் மீனா
நல்லவன் வேஷம் போட்டு சுற்றி வந்த பிரசாந்த் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற விஷயத்தை மறந்து விட்டான். ஆம் பிரசாந்த்தோ ஜனார்த்தனன் பிழைத்துக்கொண்டால் தான் மாட்டி விடுவோம் என்பதை அறிந்து எப்படியாவது மீனாவின் அப்பாவை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றிக் கொண்டிருந்தான். அடிக்கடி ஜனார்த்தனன் ரூமிற்கு செல்வது ஏதாவது மாற்றி மாற்றி பேசுவது என பிரசாந்தின் செய்கையில் மீனாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள் பிரசாந்த் ஜனார்த்தனன் இடம் கோபமாக பேசுவதை மீனா ஒளிந்திருந்து கேட்டு விட்டார். பிரசாந்த் தான் கொலைகாரன் என்பதை புரிந்து கொண்ட மீனா உடனே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மீண்டும் சென்று அனைவரிடத்திலும் இந்த உண்மையை கூறி அழுகிறார்.
சினிமாவை மிஞ்சிய சீரியல்
மீனா சொல்லும் உண்மையை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் எப்படியாவது பிரசாந்தின் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் , அதற்கு தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே நம் தம்பிகளை வெளியே கொண்டு வர முடியும் என்று யோசித்து சினிமாவை மிஞ்சிய சீரியலாக புகழும் அளவிற்கு பல திட்டங்களை போட்டு பிரசாந்தை பிடிக்க முயல்கின்றனர். முல்லை, மீனா, மூர்த்தி ,கண்ணன் ,ஐஸ்வர்யா, முல்லையின் அப்பா ஆகியோர் சேர்ந்து ஒரு சூப்பரான ஐடியாவை போடுகின்றனர். அதில் மீனா அவரது அம்மா அவரது தங்கை ஆகிய மூவரும் பிரசாந்திடம் கூறிவிட்டு வீட்டிற்கு செல்வதாக வந்து விட்டனர்.
இந்த வாய்ப்பை மிஸ் பண்ண கூடாது அப்படின்னு யோசிச்ச பிரசாந்த் கண்டிப்பா மீனாவோட அப்பாவ ஏதாவது செய்யப்போவான் அப்படிங்கிறத உணர்ந்து இந்த திட்டத்தை போட்டு இருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரியே பிரசாந்தும் மீனாவோட அப்பா ரூமுக்குள்ள போறான். ஆனால் பிரசாந்த் செல்வதற்கு முன்பே ஐஸ்வர்யா ஜனார்த்தனன் ரோமில் மொபைல் போனில் கேமராவை ஆன் செய்து வைத்து விட்டு சென்று விட்டார்.
இது பற்றி தெரியாத பிரசாந்த்தும் தான் செய்த அனைத்தையும் ஜனார்த்தனனிடம் கோபத்துடன் கூறிவிட்டு அவரை கொலை செய்ய முயற்சி செய்யும் பொழுது மூர்த்தி மீனா கண்ணன் என அனைவரும் வந்து கையும் கழகமாக பிடித்து விட்டனர். பரபரப்பான திருப்பங்களுடன் சீரியலை தொடரும் என முடித்து விட்டனர் இனி அடுத்து என்ன நடக்கும் பிரசாந்த் ஏதாவது அதற்குள் திட்டம் போட்டு ஏமாற்றி விடுவானா அல்லது கோர்ட்டில் ஆஜராகி ஜெயிலுக்கு சென்று விடுவானா கதறும் ஜீவாவும் வெளியே வந்து விடுவார்களா என அடுத்து என்ன நடக்கும் என்பதை சினிமா லெவலுக்கு யோசிக்க வைத்த சீரியலாக இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது.
மேலும் படிக்க : Bakiyalaxhmi serial update: 2 வருஷம் கழிச்சு பிறந்த அதிசய குழந்தை;பிறந்தவுடன் ஓடுமா என நெட்டிசன்கள்