Pandian stores 2 : நீதான் ராஜி என்ன விடனும் – காதலில் விழுந்த கதிர்
நமது விஜய் டிவியில் இரண்டு சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலாக வளம் வருவது நமது பாண்டியன் ஸ்டோர் சீரியல். இதில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ராஜி கதிர் காதல் தொடங்க ஆரம்பித்துவிட்டது.
கோலத்தை அலங்கோலமாக்கும் குமார்
நம்ம ராஜி எப்பவும் போல காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டிருந்தார் அதை பார்த்த குமார் இவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து வண்டியை கொண்டுவந்து ராஜி போட்ட கோலத்தில் விடுகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த கதிர் பொங்கி எழுந்து உணர்ச்சி வசப்பட்டு குமாரின் மேல் தண்ணீர் ஊற்றி அவரை அடிக்க ஆரம்பிக்கிறார். இரண்டு பேருக்கும் இடையில் உள்ள சண்டையை நிறுத்த முடியாமல் ராஜியின் பாட்டியோ திணறுகிறார்.
நீதான் ராஜி என்ன விடணும் – கதிர்
ஒருவழியாக குமாரை சமாளித்து பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்று விடுகிறார் இந்நிலையில் கதிரோ மீண்டும் அடிக்க துள்ளும் பொழுது ராஜி இறுக்கமாக கதிரின் கையைப் பிடித்துக் கொண்டு இங்க பாரு நம்ம சரவணன் மாமா கல்யாணம் நடக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்க பாரு ஒரு விஷயத்தை விட சொன்னால் நீ விட மாட்டியா அப்படின்னு சொல்லும் பொழுது கதிர் நல்லா பாரு நீதான் என்ன விடனும் நீதான் என் கைய புடிச்சிடடு இருக்க என்று சொன்னதும் ராஜி கையை விட்டு விடுகிறார்.
பாவம் காதலா மாறி ரொம்ப நாள் ஆயிருச்சு
இது ஒரு புறம் இருக்க அடுத்ததாக குமார் அளித்த கோலத்தை நானே போடுகிறேன் என்று கதிர் கோலம் போட அந்த சமயம் நமது மீனா வருகிறார். என்ன கதிர் பாவம் பாசமா மாறி பாசம் இப்ப காதலா மாறிருச்சா என்று கிண்டல் இந்நிலையில் கதிருக்கும் ராசிக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் எந்த பதிலும் கூறாமல் இருவரும் சென்று எப்படியோ இவ்வளவு பிரச்சனை நடந்தாலும் நம்ம எல்லாரும் எதிர்பார்த்த கதிர் மற்றும் ராஜிக்கு இடையே ஏதோ ஒரு பந்தம் இப்பொழுது வந்துவிட்டது.