அரசியல்வாதியாக மாறும் விஜய் சேதுபதி
துக்ளக் தர்பார் விஜய் சேதுபதியின் அடுத்த படம்.
பேரே அட்டகாசமா இருக்கே! அந்த திரைப்படத்தோடு புதுசா வெளியிடப்பட்ட படங்கள் அதைவிட அட்டகாசமா இருக்கு.
துக்ளக் தர்பார்
துணை இயக்குநராக பணிபுரிந்த தீனதயாளன் தற்போது இயக்குனராக இறங்கும் முதல் படம் துக்ளக் தர்பார். சில்லுனு ஒரு காதல், நானும் ரவுடிதான், 96 இந்தப் படங்களை இவர் துணை இயக்குனராக வேலை செஞ்சிருக்காரு. இந்த படம் பட்டியலில் செம ஹிட்டானது இவரோட இப்போ இந்த தனி முயற்சி இன்னும் செம ஹிட்டாகும் போல.
விஜய்சேதுபதி காற்று வெளியிடை புகழ் அதிதி ராய், அச்சம் என்பது மடமையடா புகழ் மஞ்சிமா மோகன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் காயத்ரி, நானும் ரவுடிதான் வில்லன் பார்த்திபன் இப்படி செம்ம கேஸ்டிங்கோட வரப்போகுது துக்ளக் தர்பார்.
‘பொன் கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்காது’ அதுமாதிரி நேத்து புதன்கிழமையும் அதுவுமா துக்ளக் தர்பார் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு இருக்காங்க. செம மாசா இருக்காரு விஜய்சேதுபதி. மேல ஒரு கருப்பு சட்டை கீழே இன்னொரு விதமான கருப்பு சட்டை. இதற்கு நடுவுல தங்கம் மினுமினுக்குது
அதோட தொடர்ச்சியா இன்னிக்கி அந்தப் படத்துல சில படங்களையும் வெளியிட்டு இருக்காங்க. அரசியல் பின்னணியில் திரைப்படம் வரப்போகுதுன்னு இந்த படங்களை பார்த்தாலே தெரியுது. விஜய் சேதுபதியும் பார்த்திபனும் கதர் வேட்டி சட்டையில் பட்டையக் கிளப்புறாங்க. ரெண்டு பேருக்கும் அரசியல் கெட்டப்பு செமையா சூட்டாயிருக்கு.
விஜய் சேதுபதி செய்யாத கதாபாத்திரங்களே இல்லை என்கிற அளவுக்கு பல படங்களில் நடித்தவர் ரவுடி போலீஸ் கெட்டப்பில் அசத்திர பாரு இப்போ புதுசா அரசியல்வாதியா இறங்கியிருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்புல அசத்தும் இவர் நிஜ அரசியலுக்கும் வருவாரோ!
துக்ளக் தர்பாரின் படப்பிடிப்பு 50% முடிஞ்ச நிலைமையில இருக்கு. தமிழக அரசாங்கம் எப்ப ஊரடங்கு முடிப்பாங்க படத்தை எப்ப முடிச்சு வெளியிடலாம்னு இந்த திரைப்படக்குழுவினர் காத்துட்டு இருக்காங்க.
இப்ப ரிலீசான இந்த படங்களை பார்த்த பிறகு ரசிகர்களும் ரொம்ப ஆவலுடன் காத்திருக்காங்க.