சினிமா

விஜய் சேதுபதி அசத்தும் லாபம் மூவி ட்ரைலர்

மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் தனது ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை தற்போது லாபம் என தொடர்ச்சியாக இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசி வருகிறார்.

இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளன. ஏற்கனவே புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறி கிடக்கின்றன.

இவ்வரிசையில் வெளிவந்துள்ள லாபம் படத்தில் தொழிற்சாலை இயக்குனர் தான் விவசாயமும் மக்களும் வாழ முடியும் என்று நம்ப வைத்துள்ளார்கள். விவசாயம் பண்ணா மட்டும் தான் தொழிற்சாலை இயங்க முடியும் என்பது தான் உண்மை.

மாசேதுங், ஸ்டாலின், ஏங்கல்ஸ், மார்க்ஸ், எல்லாம் படித்து விட்டு புரட்சி புரட்சி பேசுறீங்க? போன்ற வசனங்களும் சிவப்பு நிறத்துடன் முடியும். டிரைலரும் அக்மார்க் இடதுசாரிய சிந்தனை கொண்ட படம் என்பதையே உணர்த்துகிறது.

மாசேதுங், ஸ்டாலின், லெனின், ஏங்கல்ஸ், மார்க்ஸ், எஸ்பி ஜனநாதன், மார்க்ஸ், ஸ்டாலின் எங்கள் மற்றும் சீனாவில் கம்யூனிசத்தை தோற்றுவித்த சீனாவின் தந்தை மாசேதுங் என ஆகிய புரட்சியாளர்களை வழக்கம் போல் வசனங்களில் வைத்து மக்கள் மனதில் மீண்டும் இடம் பெறச் செய்துள்ளார்கள்.

இது மட்டுமல்ல படத்தின் போஸ்டரில் விஜய் சேதுபதி தாடியோடு இருப்பது மார்க்ஸ், ஏங்கல்ஸ் தாடி நினைவுபடுத்தி நெகிழ வைக்கிறது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *