Vijay Leo movie: விஜயின் லியோ படம்; முதல் நாளே இவ்வளவு வசூலா; வியப்பில் திரையுலகம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜயின் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படம் லியோ. இப்படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்ததை விட மிக பிரம்மாண்டமாக உள்ளது விஜய் நடிக்கும் இப்படத்தில் திரிஷா, வில்லனாக சஞ்சய் சத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நீயோ படத்தில் நடித்துள்ளனர். லியோ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் வெற்றியை காட்டி உள்ளர்.

எவர்கிரீன் ஜோடி விஜய் , திரிஷா
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படம் திரையரங்குகளில் வெளியானது லியோ ரிலீஸ் தேதியான அக்டோபர் 19 விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி போல் இருந்தது . படத்தின் ரிலீஸ் தேதியை லியோ நாள் என்று திருவிழா போல் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மற்ற படங்களை காட்டிலும் விஜயின் லியோ படத்திற்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்தது . ஏனெனில் இன்றும் எவர்கிரீன் படமாக இருக்கும் கில்லி திரைப்படத்தில் ஜோடிகளான விஜய், த்ரிஷா ஜோடி காலத்தால் அழியாத ஜோடிகளாக இன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

அப்படிப்பட்ட ஜோடி பல வருடங்களுக்குப் பின்பு இன்று திரும்பி வந்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களை இன்னும் ஆவலுடன் பார்க்க வைத்துள்ளது.
லியோ படம் ரிலீஸ்
அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசான இப்படம் பிளாக் பாஸ்டர் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் ரிலீஸ் தேதிக்கு முன்பே முன்பதிவு டிக்கெட் 100 கோடியை வசூல் செய்து உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாள் வசூல் முப்பத்து நான்கு கோடியை எட்டியுள்ளது. மேலும் லியோ ரிலீசான தேதியிலிருந்து வார விடுமுறை ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை ஆகியவை தொடர்ந்து வருவதால் இன்னும் பல கோடி வசூலை லியோ எட்டி விடும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
