சினிமாசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Nayan birthday: நயன்தாராவிற்கு விக்கி கொடுத்த காஸ்ட்லி பிறந்தநாள் பரிசு அதன் விலை என்ன தெரியுமா????

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக பல ஆண்டுகள் பலம் வருபவர் நயன்தாரா இவரின் நடிப்பு திறமையால் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்டாலும் 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் தனது திறமையை காட்டி இப்பொழுது யாரும் தனது இடத்திற்கு வர முடியாத அளவிற்கு மிக பெரிய வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா தற்பொழுது பெண்களின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வருகிறார் இவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது இந்த நிலையில் கடந்த வருடம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது உயிர் மற்றும் உலகம் ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

விக்கி கொடுத்த காஸ்ட்லி பரிசு

இந்நிலையில் தனது காதல் மனைவியின் பிறந்தநாளை விக்னேஷ் சிவன் எப்பொழுதும் பிரம்மாண்டமாக கொண்டாடுவார். இந்த நிலையில் இந்த வருடம் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாள் வந்தது இதனை தொடர்ந்து பிறந்தநாள் பரிசாக விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு காஸ்ட்லியான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார் . இதனால் நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் தனது கணவரின் அன்பை பார்த்து மெய்சிலிர்த்து போனார்.

இன்ஸ்டாவில் அன்பை வெளிப்படுத்திய நயன்

அப்படி என்ன பரிசு விக்னேஷ் சிவன் கொடுத்தார் என்று யோசிக்கிறீர்களா.. விக்னேஷ் சிவன் பிறந்தநாள் பரிசா கொடுத்தது ஜெர்மனின் luxury car என்று கூறக்கூடிய விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் மேபேட்ச் ( Mercedes Benz Maybach ) என்ற காரை பிறந்தநாள் பரிசாக தனது மனைவிக்கு கொடுத்துள்ளார். இந்த காரின் முழு புகைப்படத்தை நயன்தாரா வெளியிடவில்லை இந்த காரின் லோகோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு,

WELCOME HOME YOU BEAUTY, My dear husband Thank you for the most sweetest birthday gift, Love you

nayanthara insta page

இதுபோன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது காதல் கணவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். விக்கி பரிசாக அளித்த இந்த காரின் மதிப்பு 2.60 கோடியிலிருந்து 3.50 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வருடம் நயன்தாரா தனது பிறந்த நாளை தனது இரு ஆண் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார் மேலும் தனது கணவர் அளித்த பிறந்தநாள் பரிசில் மெய்சிலிர்த்து போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *