வித்யுலேகா அடுத்த சிம்ரனாக உருவெடுக்கிறார்
வித்யுலேகா ராமன் 30 கிலோ எடை குறைத்துள்ளார். ஒவ்வொருவரும் ஒரு கிலோ ரெண்டு கிலோ குறைக்கவே மூகம் சுலிக்கிறோம் இவங்க எப்படி குறைத்தாங்க?
நீதானே என் பொன்வசந்தம் என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். கதாநாயகி சமந்தாவின் தோழியாக வந்து கதாநாயகன் ஜீவாவின் தோழனான சந்தானத்துக்கு துணையாக நடித்திருந்தார்.
வடிவேலு விவேக் போன்ற ஆண் நகைச்சுவையாளர் ஈட கொடுத்த கோவைசரளா ஆச்சி அம்மா போன்று தற்போது சந்தானத்திற்கு ஈடுகொடுக்கும் பெண் நகைச்சுவையாளர் வித்யுலேகா ராமன்.
வித்யுலேகாவின் குடும்பம்
வித்யூலேகா ராமன், வெள்ளித்திரை சின்னத்திரை நடிகரான மோகன் ராமன் மகள். 80ஸ் 90ஸ் கிட்ஸ் திகில் சின்னத்திரை தொடர்களான மர்மதேசம், சிதம்பர ரகசியம் போன்ற சீரியல்களில் மோகன் ராமன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
வக்கீலும் அரசியல்வாதியுமான வி. பி. ராமன் வித்யூலேகா ராமனின் தாத்தா. தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் வித்யூலேகா ராமனின் பெரியப்பா.
கோலிவுட் டோலிவுட்
தெலுங்கு திரையுலகிலும் பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். செப்பியாக பப்ளியா நகைச்சுவை வேடங்களில் பல திரைப்படங்களில் இரண்டு மொழிகளிலும் கலக்கியுள்ளார். திரை உலகில் இருப்பவர்கள் ஊடகம் விமர்சனங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு வித்யூலேகா ராமன் குண்டாக இருப்பதை பற்றிய கேள்விகள் விமர்சனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது.
எடைக்குறைப்பு ரகசியம்
“நான் அதிக எடையுடன் இருந்தபோது எல்லோரும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி “நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?”. பின்னோக்கிப் பார்த்தால், நானா? அல்லது என் வாழ்நாள் முழுவதும் நான் பருமனாக இருப்பேன் என்ற உண்மையை நான் புரிந்துகொண்டேன்? இன்று நான் உண்மையில் என்னைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனென்றால் நான் நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்தேன், என் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றினேன். நாம் மனதை வைத்தால், எதுவும் சாத்தியம் என்பதை நான் உணர்ந்தேன். நீங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், வாரத்திற்கு 6 முறை பயிற்சி செய்து ஒரு சீரான உணவு முறை பின்பற்ற வேண்டும். முடிவைச் செய்ய இரகசிய போஷன் அல்லது மாத்திரை எதுவும் இல்லை! வெறும் தூய்மையான கடின உழைப்பு. வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல, ஆனால் முடிவைப் பார்க்கும்போது, அது வியர்வை மற்றும் கண்ணீருக்கு மதிப்புள்ளது.”
என பேட்டி அளித்துள்ளார் இளம் நாயகி வித்யூலேகா. இவரின் சொற்கள் “உன்னால் முடியும் தம்பி…” பாடலை நினைவுபடுத்துகிறது.
முன்னணி கதாநாயகர்களுக்கு ஈடாடயாக உருவெடுக்கும் ஸ்லிம் நாயகி வித்யூலேகா. வித்யூலேகா தற்போது 68.5 kgs இருக்க அவர்களின் எடை குறைப்பு பயணம் இன்னும் முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
நாளவில் ஸ்லிம் என்றால் சிம்ரன் என்பது மாறி வித்யுலேகா எனவும் ஆக கூடும் போலிருக்கே! பொறுத்திருந்து பார்ப்போம்.