Vijayathasami 2023 vidyarambam: குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்யாரம்பம் 2023 வழிபடும் முறை, நேரம்
வெற்றியை குறிக்கும் நாளாக விஜயதசமி நாள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்கள் அம்மனை வழிபடாவிட்டாலும் விஜயதசமி அன்று வழிபடுவது மிகுந்த வெற்றியை தேடி தரும் என்பது ஐதீகம். சிறு குழந்தைகளுக்கு இன்றைய நாளில் கல்வியை தொடங்கினால் அவர்கள் வாழ்வில் வெற்றி பெற்று கல்வியால் முன்னேறும் நாளாக அமையும் அவர்களின் வாழ்வில் கல்வியின் மேன்மையை உணரும் நாளாக இருக்கும்.
வித்யாரம்பம் 2023
வெற்றிக்கான நாளாக கொண்டாடப்படுகிறது இந்நாளில் நேர்மறையான எண்ணங்கள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இச்சா, கிரியா, ஞானம் என்னும் மூன்று சக்திகளும் ஒரே நாளில் ஒன்று சேர்ந்து தீய சக்திகளை அழித்து நன்மை கிடைக்க உதவுகிறது. இன்றைய நாளில் குழந்தைகள் முதன் முதலில் தங்கள் தங்கள் கல்வியை தொடங்கினால் அவர்களின் வாழ்நாள் முழுவதும் இந்நாளின் பலன் கிட்டும். உங்களின் குழந்தைகளின் எண்ணங்களை விரிவாக அதனை செயல்படுத்தும் நீண்ட பயணத்தின் தொடக்கமாக இந்நாள் இருக்கும்.
வித்யாரம்பம் 2023 எவ்வாறு செய்வது??
விஜயதசமி அன்று உங்கள் குழந்தைகளை மற்ற விழாக்களை போல குளிக்கவைத்து புத்தாடை அணிவித்து உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும்.
குழந்தைகளை கோவிலின் பூசாரி மடியிலோ அல்லது உங்கள் வீட்டில் பெரியவர்கள் மடியிலோ அல்லது பெற்றோர்கள் மடியிலோ அமர வைக்க வேண்டும்.
பின்பு அரிசி நிரப்பப்பட்ட தட்டில் குழந்தைகளின் ஆள்காட்டி விரலை பிடித்துக் கொண்டு
ஓம் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ
என்ற மந்திரத்தை அவர் அவர்களின் தாய்மொழியில் எழுத வைக்க வேண்டும்.
பின்பு இந்த மந்திரத்தை நாணயம் அல்லது தங்கத்தால் குழந்தைகளின் நாவில் எழுதினால் சரஸ்வதி குழந்தையின் நாவில் இருப்பாள் என்பது ஐதீகம்.
வித்தியாரம்பம் விழா முடிந்த பின்பு விஜயதசமி நன்னாளில் ஏழை எளிய குழந்தைகளுக்கு பென்சில் பேனா நோட்டு புத்தகம் ஆகிய கல்வி சார்ந்த பொருட்களை தங்கள் குழந்தைகளின் கைகளால் மற்ற குழந்தைகளுக்கு கொடுப்பது மிகுந்த பலனை தேடித் தரும்.
வித்யாரம்பம் 2023 வழிபடும் நேரம்
இந்த வருடம் நவராத்திரி முதல் நாள் அக்டோபர் 15 ஆம் தேதி பிரதமை திதியில் தொடங்கி அக்டோபர் 23 ஆம் தேதி நவமி திதியில் முடிவடைந்தது.அக்டோபர் 24 ஆம் தேதி வெற்றியைக் குறிக்கும் நாளான விஜயதசமி வந்துள்ளது. இன்றைய தினம் குழந்தைகளுக்கு முதன் முதலாக அரிசியில் அல்லது மண்ணில் கல்வியை தொடங்கி அவர்களின் வாழ்வை செழிக்க வைக்கும் நாளாக உள்ளது இன்றைய தினம் உங்கள் குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் செய்ய விரும்புவோர் காலை 6.00 மணி முதல் 8.50 வரை வழிபடலாம் அல்லது காலை 10.40 மணி முதல் மதியம் 1.00 மணி வரை வழிபடலாம் ராகு காலம் எமகண்டம் ஆகிய நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் நீங்கள் வழிபடுவது நல்லது.
வித்யா என்றால் அறிவு என்றும் ஆரம்பம் என்றால் தொடக்கம் என்றும் பொருள் தரும். எனவே வித்யா ஆரம்பம் என்பது குழந்தைகளின் அறிவு பாதைக்கான தொடக்கமாக அமையும் இன்றைய தினத்தில் உங்கள் குழந்தைகளின் கல்வி பயணத்தை தொடங்கி வைக்க தவறாமல் அனைவரும் வித்தியாசம் நிகழ்ச்சியை செய்து விடுங்கள் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை மிக அருமையானதாக இருக்கும் கல்வியால் மேம்பட்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.