ஃபேசன்அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

தங்கம் போல் ஜொலிக்க இந்த ஒரு பேக் போதும்..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் முகப்பொலிவு என்பது நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ளது. நீங்கள் சாதாரணமாக ஒரு வேலைக்கு சென்றாலோ அல்லது வெளியில் ஏதாவது ஒரு சுப காரியங்களுக்கு சென்றாலோ முகப்பொலிவுடன் இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் அழகு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒருவரை ஒருவர் வென்று விடும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு அழகாக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக உள்ளனர். கீழே உள்ள டிப்ஸ் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எளிதில் முகப்பொலிவு பெற உதவியாக இருக்கும்.

முகம் பொலிவு பெற அருமையான ஒரு டிப்ஸ்

முகம் பொலிவு பெற மிக அருமையான டிப்ஸ் ஆக இது உங்களுக்கு இருக்கும். இதற்கு நீங்கள் முதலில் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஷாம்புவானது மத்த எந்த ஒரு ஹேர் ட்ரீட்மென்ட்க்கு பயன்படுத்தும் ஷாம்பு ஆக இருக்கக் கூடாது அதில் முக்கிய கவனம் செலுத்தி பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அப்படி உங்களுக்கு வேறு எந்த ஷாம்பு பயன்படுத்தவும் பயமாக இருந்தால் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி ஷாம்பு எடுத்துக் கொள்ளலாம் அதை உபயோகிப்பதில் எந்த பயமும் தேவையில்லை.

பேபி ஷாம்பூ ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் கஸ்தூரி மஞ்சள் 1 சிட்டிகை, காய்ச்சாத பால் ஒரு டீஸ்பூன், கான்பிளவர் மாவு தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஒரு பேக் போல நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனை உங்கள் முகத்தில் நன்றாக பூசிக்கொள்ளுங்கள்.

முகத்தில் பூசிய சில மணி நேரத்தில் பேக் நன்றாக காய்ந்திருக்கும் அப்பொழுது தண்ணீரை கைகளால் எடுத்துக் கொண்டு நன்றாக மசாஜ் செய்வது போல் முகத்தை தேய்த்துக் கொள்ளுங்கள் பின்பு குளிர்ந்த சுத்தமான நீரால் முகத்தை கழுவி துடைத்து கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் தெரியும் மாற்றத்தை நீங்களே உணர முடியும். உங்கள் முகம் வெள்ளை நிறத்தில் பளபளவென மின்னுவது போல் இருக்கும். எங்காவது வெளியில் செல்லும்போது இந்த முறையை பயன்படுத்தினால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும் முகமும் பொலிவு பெறும்.

இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை உங்கள் முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *